பாபி சிம்ஹா நடிப்பில் யுவா புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் புதிய படம் – பிரம்மாண்ட பூஜையுடன் தொடக்கம்
யுவா புரொடக்ஷன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் யுவா கிருஷ்ணா தொலட்டி தயாரிப்பில், மெஹர் யாரமாட்டி இயக்கத்தில், பாபி சிம்ஹா மற்றும் ஹெப்பா படேல் நாயகன்–நாயகியாக நடித்துள்ள புதிய திரைப்படம் பிரம்மாண்ட பூஜையுடன் தொடங்கப்பட்டது. இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் உருவாகிறது. முகூர்த்த நேரத்தில் முதல் ஷாட்டுக்கு எஸ்.கே.என் கிளாப் அடிக்க, வம்சி நந்திபதி கேமராவை ஆன் செய்தார். தனிகில்லா பரணி படத்தின் திரைக்கதையை படக்குழுவினரிடம் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் முழு படக்குழுவும் கலந்து கொண்டது. இந்த படத்தில்…
