

தனுஷ் தனது அடுத்த இயக்குநர் முயற்சியாக இட்லி கடையை கொண்டு வந்திருக்கிறார். டான் பிக்சர்ஸ், வுண்டர்பார் பிலிம்ஸ் தயாரிப்பில், ரெட் ஜெயன்ட்ஸ் வெளியீட்டில் வந்துள்ள இந்த படம் எளிய கதை கொண்டிருந்தாலும், அதை சொல்லும் விதத்தில் ஆழமான உணர்ச்சிகளை தருகிறது. நிலம், பாரம்பரியம், பெற்றோரின் வளர்ப்பு போன்ற அனைவருக்கும் தொடர்புள்ள விஷயங்களை படம் பேசுகிறது.
பாங்காக்கில் வேலை பார்த்து வந்த முருகன் (தனுஷ்), மீராவை காதலிக்கிறார். இவர்களின் திருமணம் 15 நாளில் நடக்க இருக்கிறது. கிராமத்தை விட்டு செல்லும் முன், தந்தை குடும்ப மரியாதையான சிவனேசன் இட்லி கடையை மறக்காமல் நினைவில் வைத்துக்கொள் என்று சொல்கிறார். இதே நேரத்தில், விஷ்ணுவர்தன் (சத்தியராஜ்) தனது மகன் அஷ்வினை (அருண் விஜய்) சூதாட்டம் போன்ற தவறான வழியில் தள்ளுகிறார். திருமணத்துக்காக பெற்றோரை அழைக்க முயன்ற முருகன், தந்தை மரணம் அடைந்துவிட்டார் என்ற செய்தியால் அதிர்ச்சி அடைகிறார். விரைவில் தாயும் உயிரிழக்க, அவர் முற்றிலும் சோகத்தில் ஆழ்கிறார்.
துக்கத்தில், இட்லி கடையை விற்க முடிவு செய்த முருகன், சிறுவயது நினைவுகள் மற்றும் கயல் (நித்யா மேனன்) சொல்வதினால் மனம் மாறுகிறார். கடையை விற்கும் எண்ணத்தை கைவிட்டு, தந்தையின் வழியைத் தொடர முடிவு செய்கிறார். சட்டை, வேஷ்டி அணிந்து, பெருமையோடு சிவனேசன் இட்லி கடையை நடத்தத் தொடங்குகிறார். ஆனால் அஷ்வின் எதிரியாக வந்து மோத, விஷ்ணுவர்தன் போலிசாரை பயன்படுத்தி கடையை பறிக்க முயல்கிறார். கடை தீயில் எரிந்தாலும், முருகன் அதை மீண்டும் கட்டி எழுப்புகிறார். “இந்த கடை என் பெற்றோர்களின் அன்பின் சின்னம்” என்று அறிவிக்கிறார். கயலும் தனது தாயின் விருப்பத்தை மீறி, முருகனோடு நிற்கிறாள்.
படத்துக்கு ஜி.வி. பிரகாஷின் இசை மிகப் பெரிய பலமாக அமைகிறது. சோகக் காட்சிகளில் இதமாகவும், ஆக்ஷன் காட்சிகளில் ஆற்றலாகவும் இசை அமைகிறது. கீரன் கௌஷிக் ஒளிப்பதிவு, ஜி.கே. பிரசன்னா எடிட்டிங் ஆகியவையும் சிறப்பாகப் படத்தை உயர்த்துகின்றன.
மொத்தத்தில், இட்லி கடை என்பது உணர்ச்சிகளால் நிறைந்த குடும்பக் கதை. அன்பு, இழப்பு, பாரம்பரியம், உணவு கலாசாரம் ஆகியவற்றை ஒன்றாக இணைத்து சொல்கிறது. தனுஷின் இயல்பான நடிப்பும், சத்தியராஜ் – அருண் விஜய் வில்லன் கதாபாத்திரங்களும், நித்யா மேனனின் பாசமான நடிப்பும், இசை – காட்சிப்பதிவும் சேர்ந்து, பார்வையாளர்களுக்கு இதமாகவும் உருக்கமாகவும் இருக்கும். எளிய கதை, ஆனால் மனதை வருடும் காட்சிகள் கொண்ட இந்த படம் பண்டிகைக்கான சரியான குடும்ப ரசனை.
ரேட்டிங்: 4.1/5
Idli Kadai Movie Cast & Crew Details
Produced by – Dawn Pictures and Wunderbar Films Pvt Ltd presents
Starring: Dhanush, Nithya Menon, Arun Vijay, Shalini Pandey, Sathyaraj, Rajkiran, Parthiban, Samuthirakani , Ilavarasu
Director: Dhanush
Produced by : Aakash Baskaran & Dhanush
Banner : Dawn Pictures & Wunderbar Films Pvt Ltd
Music : G.V Prakash Kumar
Editor : G.K Prasanna
DOP : Kiran Koushik
Action: Peter Hein
Art: Jackie
Dance Choreographer: Sathish
Stills:- Theni Murugan
Costumer:- Nagu
Makeup : B Raja
Costume Designer: Kavya Sriram
Publicity Design: Kabilan
Production Controller: D.Ramesh Kuchirayar
Marketing Head:- Manoj Maddy
PRO : Riaz K Ahmed – Sathish AIM
Music and Digital Partner – Saregama
Executive Producer: Sreyas Srinivasan
