
சமீப காலங்களில் மலையாள சினிமா இந்திய திரைப்படத் துறையில் மிகவும் வலுவான இடத்தைப் பிடித்துள்ளது. தரமான கதைக்களம், யதார்த்தமான கதாபாத்திரங்கள் மற்றும் விறுவிறுப்பான திரைக்கதைகளுடன் உருவாகும் படங்கள், பான்-இந்திய படங்களுடன் போட்டியிடும் அளவுக்கு வரவேற்பைப் பெற்று வருகின்றன. அந்த வரிசையில், ஆக்ஷன் மற்றும் கேங்ஸ்டர் பின்னணியில் உருவாகியுள்ள “காட்டாளன்” திரைப்படமும் ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கும் படமாகத் தெரிகிறது.
இயக்குநர் பால் ஜார்ஜ் இயக்கத்தில், ஆண்டனி வர்கீஸ் கதாநாயகனாக நடித்துள்ள இப்படம், அடர்ந்த வனப்பகுதிகளில் நடைபெறும் சட்டவிரோத தந்தக் கடத்தலை மையமாகக் கொண்டு நகர்கிறது.
படத்தில் மாரி என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ள சுனில், சிறுவயதிலிருந்தே யானைகளை வேட்டையாடி, அவற்றின் தந்தங்களை இலங்கைக்கு சட்டவிரோதமாக கடத்தும் கொடூரமான கடத்தல் தலைவனாக வருகிறார். தனது ஆட்சிக்கு எதிராக நிற்பவர்களை தயக்கமின்றி அழித்து, வனப்பகுதியையே தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் மாரி, சுமார் நாற்பது வேட்டைக்காரர்களைக் கொண்டு ஒரு சக்திவாய்ந்த குற்றச் சாம்ராஜ்யத்தை நடத்துகிறார்.
ஆனால் அவரது பேராசையும் வன்முறையும் நாளடைவில் அவரது சொந்த கூட்டாளிகளுக்குள்ளேயே அதிருப்தியை உருவாக்குகிறது. பலரும் மறைமுகமாக அவரது ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க விரும்புகின்றனர். இதற்கிடையில், போட்டி கும்பலான எட்டி கேங், மாரியை வீழ்த்தி தந்தக் கடத்தல் வியாபாரத்தை கைப்பற்ற முயல்கிறது.
அந்த சூழ்நிலையில்தான் ஆண்டனி வர்கீஸின் கதாபாத்திரம் அறிமுகமாகிறது. எந்த சவாலையும் அஞ்சாமல் எதிர்கொள்ளும் துணிச்சலான நபராக அவர் தோன்றுகிறார். குறைந்த வசனங்களிலேயே தனது உடல் மொழி, பார்வை மற்றும் ஆக்ஷன் காட்சிகள் மூலம் ஆண்டனி வர்கீஸ் வலுவான தாக்கத்தை ஏற்படுத்துகிறார்.
படத்தின் முதல் பாதி, வனப்பகுதியின் பின்னணியில் அமைந்துள்ள காட்சிகள், மோதல்கள் மற்றும் கடத்தல் சம்பந்தமான சுவாரஸ்யமான திருப்பங்களின் மூலம் பார்வையாளர்களை ஈர்க்கிறது. குறிப்பாக இடைவேளைக்கு முன் வரும் திருப்பம் கதையின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்கிறது. KGF, புஷ்பா போன்ற படங்களின் தாக்கம் சில இடங்களில் தெரிந்தாலும், காட்டை மையமாகக் கொண்ட ஆக்ஷன் காட்சிகள் மற்றும் இயல்பான அணுகுமுறையால் படம் தனித்துவமான அடையாளத்தை தக்க வைத்துக் கொள்கிறது.
இரண்டாம் பாதி முழுக்க ஆக்ஷன் காட்சிகளால் வேகம் பெறுகிறது. பல சண்டைக் காட்சிகள் விறுவிறுப்பாக அமைந்து படத்தின் பரபரப்பை தொடர்ந்து தக்க வைத்திருக்கின்றன.
தொழில்நுட்ப ரீதியாகவும் படம் சிறப்பாக உருவாகியுள்ளது. ஒளிப்பதிவு, வனப்பகுதியின் இயற்கை அழகையும் அதன் அச்சுறுத்தும் சூழலையும் மிக அழகாக பதிவு செய்துள்ளது. குறிப்பாக ஆக்ஷன் காட்சிகளில் காட்சியமைப்பு பெரும் பலமாக அமைந்துள்ளது. மேலும், ரவி பஸ்ரூர் வழங்கிய பின்னணி இசை பல காட்சிகளின் தாக்கத்தை உயர்த்தி, படத்திற்கு ஒரு மாஸ் உணர்வை வழங்குகிறது.
படத்தில் ஹரிசங்கர் நாராயணன், எஸ்.பி. நெல்சன் நாடார் என்ற ஊழல் நிறைந்த காவல் அதிகாரியாக நடித்துள்ளார். மதுரையைச் சேர்ந்த இவருக்கு சட்டவிரோத தந்தக் கடத்தல் மற்றும் யானை வேட்டைக் கும்பல்களுடன் நெருங்கிய தொடர்பு உள்ளது. அதோடு, போட்டி கடத்தல் தலைவனான எட்டி (கபீர் துஹான் சிங்)யின் மைத்துனரும் முக்கிய ஆதரவாளருமாக இருந்து, குற்றம், துரோகம் மற்றும் அதிகாரப் போட்டிகளை மேலும் தீவிரப்படுத்துகிறார்.
மொத்தத்தில், “காட்டாளன்” வலுவான நடிப்புகள், கண்கவர் காட்சியமைப்புகள், பரபரப்பான ஆக்ஷன் காட்சிகள் மற்றும் சுவாரஸ்யமான கேங்ஸ்டர் கதைக்களத்துடன் ரசிகர்களை கவரக்கூடிய ஒரு மாஸ் ஆக்ஷன் திரைப்படமாக உருவாகியுள்ளது.
Ratings – 3.7 / 5
CAST
Antony Varghese Pepe- Antony Varghese
Sunil – Maari
Kabir Duhan Singh- Eddy
Dushara Vijayan – Lucy
Raj Tirandasu- Maari 1995
Parth Tiwari – Roby
Harishankar Narayanan – SP Nelson Nadar
Sandeep Raviraj- Naadhu
Cameo
Alphonse Puthren – Mendis
Lokesh Kanakaraj- Leo Cabral
CREW
Banner : Cubes Entertainments
Directed by: Paul George
Produced by : Shareef Muhammed
Music by : Ravi Basrur
Additional song by : B. Ajaneesh Loknath
Dialogues : Unni R
DOP : Renadive
Additional DOP : Chandru Selvaraj, Sudeep Elamon
Editor : Shameer Muhammed
Stunts : Action Sandhosh , Kecha Khamphakdee
Writers: Paul George , Joby Varghese , Jero Jacob
Trailer Cuts: Devanand V.B
Executive Producer : Jumana Shareef
Production Designer : Sunil Das
Creative Producer : Dipil Dev
Production Controller : Deepak Parameswaran
Chief Associate : Rajesh Bhasker
Audiography : Rajakrishnan MR
Sound Design: Kishan, Sapthaa Records
Costume : Dhanya Balakrishnan
Makeup: Ronex Xavier
Still photography : Amal C Sadhar
Choreography : Sherif
VFX : 3 Doors
Colourist : Srik Varier
Main Title Design : Ident Labs
Publicity Designs : Yellowtooths
Animation : Eunoians
Other language dubbing director-RP Bala (RP studios)
Music Rights : T-Series
Distribution by : Cubes Entertainments
Overseas Distribution Partner : Phars Film
Digital and Satellite distribution partner : Shemaroo
Tamil Distribution Partner – GS Cinemas and RP Bala
Music Label- Tseries
PRO (Tamil): Nikil Murukan
