

சென்னையில், FIBA World Cup 2027 Asia Cup Qualifiers தகுதிப் போட்டி, இந்திய கூடைப்பந்து சம்மேளன தலைவர் ஆதவ் அர்ஜுனா தலைமையில், நவம்பர் 30 ஆம் தேதி நடைபெற உள்ளது.
FIBA World Cup 2027 ஆம் ஆண்டு ஆகஸ்ட் முதல் செப்டம்பர் வரை கத்தார் நாட்டில் நடைபெற உள்ளது
இந்த தொடரில் பங்கேற்கும் அணிகளை தகுதிச்சுற்று மூலம் தேர்வு செய்து வருகின்றனர்.
அந்த வகையில் உலககோப்பை போட்டியில் ஆசிய நாடுகளுக்கான தகுதிச்சுற்று போட்டிகள் சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில், நவம்பர் 30 ஆம் தேதி நடைபெற உள்ளது.
இந்த தகுதிச்சுற்று போட்டியில் இந்தியா -சவூதி அரேபிய நாடுகள் பலப்பரீட்சை நடத்த உள்ளது. அதன்படி, கூடைப்பந்து வரலாற்றில் ஒரு மதிப்பு மிக்க போட்டியை கண்டு ரசிக்க ஒரு அரிய வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது இந்த உலகக்கோப்பை தகுதி சுற்று போட்டி.
இந்திய சீனியர் கூடைப்பந்து அணி பலம் வாய்ந்த சவுதி அரேபியா அணிக்கு எதிராக நவம்பர் 30 ம் தேதி சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெறும் போட்டியில் பலப்பரீட்சை நடத்தவுள்ளது.
வரலாற்று சிறப்புமிக்க இந்த போட்டிகளை நேரில் வருகை தந்து கண்டு ரசிப்பதன் மூலம் நமது வீரர்களை ஊக்கப்படுத்துவதுடன் அடுத்த தலைமுறை வீரர்களையும் உருவாக்க வாய்ப்பாக அமையவுள்ளது. மேலும் தமிழ்நாட்டில் நடைபெறும் இந்த சர்வதேச போட்டிகள் மாநிலத்திற்கு கூடுதல் மதிப்பையும் பெற்றுத் தரும் என்பதும் குறிப்பிடத் தக்கது. கடைசியாக 2024 ஆம் ஆண்டு ஆசியக் கோப்பை தகுதிச்சுற்று போட்டிக்கு பிறகு முதன்முறையாக சென்னையில் நடைபெறுவது ஒரு பெருமை மிகு தருணம் ஆகும்.
இந்த நிகழ்வில்
Aadhav Arjuna –
President – BFI
Kulvinder Singh Gill
Secretary General- BFI
Chengalwaraya Naidu
Treasurer – BFI
Scott Flemming
Head coach – Indian men’s Team
Norman Swaroop Isaac
Chairman- Technical committee
Aezaz Ahmed
Secretary – TNBA
ஆகியோர் கலந்து கொண்டனர்.
