

இந்திய அணியை தொடர்ந்து 2வது முறையாக விழுத்தி சவுதி அரேபிய அணி
2027 கூடைப்பந்து உலகக் கோப்பைக்கான தகுதிச்சுற்று போட்டி , நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடைப்பெற்றது. இதில் இந்தியா – சவூதி அரேபியா அணிகள் பலப்பரீட்சை நடத்துயது...
20-வது உலகக் கோப்பை கூடைப்பந்து போட்டி 2027-ம் ஆண்டு ஆகஸ்டு, செப்டம்பர் மாதங்களில் கத்தாரில் நடக்கிறது. 32 அணிகள் பங்கேற்கும் இந்த உலக கூடைப்பந்து திருவிழாவுக்கு போட்டியை நடத்தும் கத்தார் தவிர மற்ற அணிகள் தகுதி சுற்று மூலமே நுழைய முடியும்.
உலகக் கோப்பை கூடைப்பந்து போட்டிக்கான தகுதி சுற்று கண்டங்கள் வாரியாக நடந்து வருகிறது. இதில் ஆசிய, ஓசியானா கண்டத்தில் இருந்து கத்தாரை தவிர்த்து 7 அணிகள் தகுதி பெறும்.
ஆசிய-ஓசியானா மண்டலத்துக்கான தகுதி சுற்றின் முதல் ரவுண்டில் 12 அணிகள் இடம் பெற்று இருக்கின்றன. அவை 4 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. இந்திய அணி ‘டி’ பிரிவில் இடம் பிடித்துள்ளது. சவுதி அரேபியா, லெபனான், கத்தார் ஆகியவை அந்த பிரிவில் உள்ள மற்ற அணிகளாகும்.
உலகக் கோப்பை கூடைப்பந்து போட்டிக்கான ஆசிய மண்டல தகுதி சுற்றில் ரியாத்தில் கடந்த வியாழக்கிழமை நடந்த தனது தொடக்க லீக் ஆட்டத்தில் இந்திய அணி 51-75 என்ற புள்ளி கணக்கில் சவுதி அரேபியாவிடம் (டி பிரிவு) தோல்வி கண்டது.
இந்த நிலையில் இந்தியா-சவுதி அரேபியா அணிகள் மீண்டும் மோதும் ஆட்டம் சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் இன்று மாலை 6 மணிக்கு நடைபெற்றது..
போட்டியில் இந்திய அணியை விழத்தி சவுதி அரேபியாவில் வெற்றி பெற்றது.. தொடக்க முதலே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சவுதி வீரர்கள் முதல் கால் பாதையில் 4:12 என்ற புள்ளி கணக்கில் முன்னிலை வகித்தனர்.. தொடர்ந்து இதே நிலையோடு தொடர்ந்து முன்னேறிய சவுதி அரேபியா வீரர்கள்.. முழு நேர ஆட்ட முடிவில் 57: 81 என்ற புள்ளி கணக்கில் இந்திய அணியை விழத்தி சவுதி அரேபிய வீரர்கள் வெற்றி பெற்றனர்..
