சமத்துவ இப்தார் விருந்து நிகழ்ச்சியில் இந்த ஆண்டிற்கான ரெயின்ட்ராப்ஸ் ‘சாதனைப் பெண்கள்’ விருதுகள் அறிமுகம்
இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரெஹானா, தொழிலதிபர் வி.ஜி.சந்தோஷம், தூய்மைப் பணியாளர் பத்மா வெளியிட்டனர். ரெயின்ட்ராப்ஸ் சமூக அமைப்பு நடத்திய சமத்துவ இப்தார் நிகழ்ச்சியில் 13-ஆம் ஆண்டு சாதனைப் பெண்கள் விருது வழங்கும் நிகழ்ச்சிக்கான முக்கிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டது. இசையமைப்பாளரும் ரெயின்ட்ராப்ஸ் சமூக அமைப்பின் தூதருமான ஏ.ஆர்.ரெஹானா, பிரபல தூய்மைப் பணியாளர் பத்மா மற்றும் சிறப்பு விருந்தினர்கள் இணைந்து இந்த ஆண்டிற்கான சாதனைப் பெண்கள் விருதினை அறிமுகம் செய்தனர். ரெயின்ட்ராப்ஸ் நிறுவனர் அரவிந்த் ஜெயபால் விருதுகளைப் பெறும் சாதனைப் பெண்களின் பெயர் பட்டியலை வெளியிட்டார். ரெயின்ட்ராப்ஸ் சமூக அமைப்பு மத நல்லிணக்கத்தைப்…
