பிரசாந்த் வர்மா இயக்கத்தில், ரிஷப் ஷெட்டி நடிப்பில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில், டி-சீரிஸ் வழங்கும் ’ஜெய் ஹனுமான்’ திரைப்படம், ஹனுமான் பிறந்த இடமான ஹம்பி அஞ்சனாத்ரியில் பாரம்பரிய பூஜையுடன் பிரம்மாண்டமாக துவங்கியது!

Group of individuals in traditional attire posing for a photo at a ceremonial event, with decorative flowers in the background and a film clapperboard.

பிரசாந்த் வர்மா இயக்கத்தில், ரிஷப் ஷெட்டி நடிப்பில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில், டி-சீரிஸ் வழங்கும் ’ஜெய் ஹனுமான்’ திரைப்படம், ஹனுமான் பிறந்த இடமான ஹம்பி அஞ்சனாத்ரியில் பாரம்பரிய பூஜையுடன் பிரம்மாண்டமாக துவங்கியது!

தேசிய விருது பெற்ற இயக்குநர் பிரசாந்த் வர்மா இயக்கத்தில் பான் இந்திய அளவில் வெற்றி பெற்ற ‘ஹனுமேன்’ திரைப்படத்தின் சீக்வலாக உருவாகும் ‘ஜெய் ஹனுமான்’ திரைப்படம் இன்று பாரம்பரிய பூஜையுடன் பிரம்மாண்டமாக துவங்கியது. பிரசாந்த் வர்மா சினிமாட்டிக் யுனிவர்ஸின் அடுத்த கட்டமாக உருவாகும் இந்தப் படத்தை முன்னணி தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் பிரம்மாண்டமாக தயாரிக்க, டி- சீரிஸ் நிறுவனம் இப்படத்தை வழங்குகிறது. தேசிய விருது பெற்ற நடிகர் ரிஷப் ஷெட்டி இந்தப் படத்தில் கடவுள் ஹனுமான் கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

தேசிய விருது பெற்ற திறமையாளர்கள் இந்தப் படத்தில் ஒன்றிணைவது, ‘ஜெய் ஹனுமான்’ படம் மீதான எதிர்பார்ப்பை நாடு முழுவதும் உள்ள ரசிகர்கள் மத்தியில் பன்மடங்கு அதிகரித்துள்ளது. சமகால நிகழ்வுகளை புராணங்களுடன் இணைத்து துணிச்சலாகவும் புதுமையாகவும் கதை சொல்வதில் தேர்ந்தவர் இயக்குநர் பிரசாந்த் வர்மா. அதுபோலவே, இந்தப் படத்தை தயாரிக்கும் மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தொடர்ச்சியாக வெற்றி படங்களை கொடுத்து வருகிறது. ’காந்தாரா சாப்டர் 1’ திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து ரிஷப் ஷெட்டி அடுத்து என்ன படத்தில் நடிக்க இருக்கிறார் என்ற எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் இருந்தது. இவை அனைத்தும் ‘ஜெய் ஹனுமான்’ படம் மீதான எதிர்பார்ப்பை அதிகமாக்கியுள்ளது.

கடவுள் ஹனுமான் பிறந்த புனித தலமாக நம்பப்படும் கர்நாடக மாநிலம் ஹம்பி, விஜயநகரில் உள்ள அஞ்சனாத்ரி பெட்டா மலைப்பகுதியில் இன்று பாரம்பரிய பூஜையுடன் படம் துவங்கப்பட்டது. டி-சீரிஸ் நிறுவனத் தலைவர் பூஷன் குமார் கிளாப் அடித்து துவக்கி வைத்தார். அனில் ததானி கேமராவை இயக்க, முதல் ஷாட்டை ’ஹனுமேன்’ படத்தின் ஹீரோ தேஜா சஜ்ஜா இயக்கினார். மேலும், அனில் ததானி, பூஷன் குமார், நவீன் யெர்னேனி மற்றும் ரவி ஷங்கர் ஆகியோர் இணைந்து திரைக்கதையை இயக்குநர் பிரசாந்த் வர்மாவிடம் கொடுத்தனர். படத்தின் ப்ரீ புரொடக்‌ஷன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் வழக்கமான படப்பிடிப்பு விரைவில் துவங்க உள்ளது.

கடவுள் ஹனுமானாக ரிஷப் ஷெட்டி இடம்பெற்றிருக்கும் முதல் பார்வை போஸ்டர் ஏற்கனவே வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. இந்த கதாபாத்திரத்தில் சக்திவாய்ந்த, ஆழமான, ஆன்மிக அனுபவத்தை தரும் வகையில் கடுமையான உடற்பயிற்சியில் ஈடுபட்டு தனது தோற்றத்தை கட்டமைத்துள்ளார் ரிஷப் ஷெட்டி.

‘ஜெய் ஹனுமான்’ கலியுகத்தை பின்னணியாகக் கொண்ட அதிரடி ஆக்‌ஷன் படமாக உருவாகிறது. ஹனுமானின் ’மௌனம் உன்னதமான நோக்கத்தை குறிக்கிறதே தவிர அது சரணாகதி அல்ல! எழுச்சி!!’ என்பதை படம் மையக்கருவாகக் கொண்டிருக்கிறது. பக்தி, நம்பிக்கை, சக்தி ஆகியவற்றை ‘ஜெய் ஹனுமான்’ படம் பிரதிபலிக்கும்.

தொழில்நுட்பக் குழு விவரம்:

எழுத்து, இயக்கம்: பிரசாந்த் வர்மா,
தயாரிப்பு நிறுவனம்: மைத்ரி மூவி மேக்கர்ஸ்,
தயாரிப்பாளர்கள்: நவீன் யெர்னேனி, ஒய். ரவி சங்கர்,
வழங்குவது: டி-சீரிஸ்,
ஒளிப்பதிவு: எஸ். திருநாவுக்கரசு,
இசை: எம்.எம். கீரவாணி,
கலை இயக்கம்: ஸ்ரீநாகேந்திர தங்கலா,
மக்கள் தொடர்பு: வம்சி-சேகர்,
மார்க்கெட்டிங்: ஃப்ர்ஸ்ட்ஷோ

Leave a Reply

error:

Discover more from view7media

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading