உணர்வுப்பூர்வமான அதேசமயம் அழகான ரொமான்ஸ் படம்தான் ‘பிரேக்ஃபாஸ்ட்'”- நடிகை ரோஸ்மின்!

A smiling woman sitting on a tree branch, wearing a traditional red and teal saree adorned with golden patterns and jewelry, surrounded by lush green foliage.

மாடலிங் துறையில் தடம் பதித்து, அதே நம்பிக்கையுடன் சினிமாத்துறையிலும் தடம் பதிக்க இயக்குநர் காந்தி கிருஷ்ணா இயக்கத்தில் வெளியாகவுள்ள ‘பிரேக்ஃபாஸ்ட்’ படம் மூலம் அறிமுகமாகிறார் நடிகை ரோஸ்மின். இந்தப் படத்தில் அவருக்கு வழக்கமான கதாநாயகி கதாபாத்திரத்தை தாண்டி, வலுவான கதாபாத்திரம் அமைந்துள்ளது. ‘செல்லமே’, ‘ஆனந்த தாண்டவம்’ படங்களில் இயக்குநர் காந்தி கிருஷ்ணாவின் கதாநாயகிகள் எப்படி ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார்களோ அதுபோலவே தனக்கும் வலுவான கதாபாத்திரம் இந்த படத்தில் அமைந்துள்ளதாக ரோஸ்மின் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

படத்தில் தனது அனுபவம் பற்றி ரோஸ்மின் பகிர்ந்து கொண்டதாவது, “‘செல்லமே’ படத்தில் ரீமா சென் கதாபாத்திரம் மிகவும் வலுவானது. அதேபோலதான், ‘ஆனந்ததாண்டவம்’ படத்திலும் அப்பாவியான அதேசமயம் வலுவான கதாபாத்திரத்தில் தமன்னா நடித்திருப்பார். ரீமா சென், தமன்னா கதாப்பாத்திரங்கள் தான் கதையை நகர்த்தி செல்லும் வகையில் முக்கியமானதாக இருக்கும். இந்தப் படங்கள் மற்றும் கதாநாயகிகளின் கதாபாத்திரங்களுக்கு நான் மிகப்பெரிய ரசிகை. அதனால், காந்தி கிருஷ்ணா சாரின் படத்தில் எனக்கு கதாநாயகிக்கான வாய்ப்பு வந்தபோது மிகவும் மகிழ்ந்தேன். இந்தப் படத்தில் நடித்திருப்பது எனக்கு பெருமை”.

மேலும், “‘பிரேக்ஃபாஸ்ட்’ படத்தில் பல உணர்வுப்பூர்வமான அதேசமயம் கியூட்டான ரொமாண்டிக் தருணங்களுடன் கூடிய வலுவான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன். என்னுடைய பன்முக நடிப்புத்திறமையை வெளிப்படுத்தியிருக்கும் இந்த கதாபாத்திரம் நிச்சயம் ரசிகர்களுக்கு பிடிக்கும். அவர்களும் என்னுடைய கதாபாத்திரத்தில் தங்களை பொருத்திப் பார்ப்பார்கள் என நம்புகிறேன். இந்த கதாப்பாத்திரம் நிச்சயம் அவர்களுக்குள் தாக்கத்தை ஏற்படுத்தும்” என்றார்.

நடிகர்கள்: ராணவ், ரோஸ்மின், சம்பத் குமார், கஸ்தூரி, கிருத்திக் மோகன், அமிதா ரங்கநாத் மற்றும் பலர்.

தொழில்நுட்பக்குழு விவரம்:

தயாரிப்பாளர்: கிரிஜா வரதராஜ்,
இயக்குநர்: காந்தி கிருஷ்ணா,
இசை: ஜி.வி. பிரகாஷ் குமார்,
பாடல் வரிகள்: வைரமுத்து மற்றும் விவேக்,
தமிழ்நாடு திரையரங்க விநியோகஸ்தர்: குகன்

உலகம் முழுவதும் ஏப்ரல் 24 அன்று ‘பிரேக்ஃபாஸ்ட்’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகிறது.

Leave a Reply

error:

Discover more from view7media

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading