ஒப்பனைக் கலைஞர் வினீஷ், “என் மீது நம்பிக்கை வைத்து இந்த வாய்ப்பு கொடுத்த இயக்குநர் சிவா மற்றும் தயாரிப்பாளர்கள் சுதன், சிவகார்த்திகேயனுக்கு நன்றி. படம் சிறப்பாக வந்திருக்கிறது”.
தாய் கிழவி’ திரைப்படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்வு! பேஷன் ஸ்டுடியோஸ் மற்றும் சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரித்திருக்க, அறிமுக இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் நடிகை ராதிகா நடிப்பில் உருவாகியுள்ள ‘தாய் கிழவி’ படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்வு இன்று நடைபெற்றது. நிகழ்வில் கலந்து கொண்ட சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் கலை, “நல்ல கதைகள் தயாரிக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் இயங்கி வருகிறது. இது எங்கள் தயாரிப்பில் ஒன்பதாவது படம். இந்தப் படத்தின் இயக்குநர் மற்றும்…
