
டாக்டர் வி.ராம் பிரசாத் மனோகர் ஐஏஎஸ் எழுதிய “கருவில் இருந்து கலெக்டர் வரை” நூல் சென்னை புத்தகக் கண்காட்சியில் வெளியீடு
தமிழ்நாடு முன்னாள் தலைமை செயலாளர் திரு வி. இறை அன்பு, ஐ.ஏ.எஸ். விழாவிற்கு தலைமை தாங்கி புத்தகத்தை வெளியிட்டார்.
சென்னை, ஜனவரி.12-
சென்னை 49 ஆவது புத்தகக் கண்காட்சியில் இன்று மூத்த ஐஏஎஸ் அதிகாரியான டாக்டர் ராம் பிரசாத் மனோகர் எழுதிய “கருவில் இருந்து கலெக்டர் வரை”என்ற புத்தகம் வெளியிடப்பட்டது.
புத்தக கண்காட்சியில் இது ஒரு புதிய இலக்கிய மைல் கல் நிகழ்வாக அமைந்தது. பார்த்தவுடன் அல்லது கேட்டவுடன் அனைவரையும் கவர்ந்து இழுக்க கடிய தலைப்பில் உள்ள கருவில் இருந்து கலெக்டர் வரை என்ற இந்த புத்தகம் ஏற்கனவே சிவில் சர்வீஸ் ஆர்வலர்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
சென்னை நந்தனத்தில் உள்ள ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடைபெற்ற வெளியீட்டு விழாவிற்கு தமிழ்நாடு முன்னாள் தலைமை செயலாளரும் பிரபல எழுத்தாளரும் பேச்சாளருமான
வி. இறை அன்பு, ஐ.ஏ.எஸ். தலைமை தாங்கி புத்தகத்தை வெளியிட்டார்.
சமகால தமிழ் இலக்கியத்திற்கு ஒரு முக்கிய பங்களிப்பாகவும் அரசு நிர்வாக வாழ்க்கையின் நுணுக்கங்களை சாதாரண மக்களும் புரிந்து கொள்ளும் வகையிலும் அதன் மதிப்பை எடுத்துக்காட்டும் விதமாகவும் இந்த நூல் அமைந்துள்ளது.
சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்ட தி நியூஸ் சர்க்கிள் நிறுவனர் மற்றும் பிபிசி வேர்ல்ட் சர்வீஸ் முன்னாள் பத்திரிகையாளர் ஜெயக்குமார் சுதந்திரபாண்டியன் மற்றும் புகழ்பெற்ற எழுத்தாளர், சாகித்ய அகாடமியின் பால சாகித்ய புரஸ்கார் விருதைப் பெற்ற எஸ். பாலபாரதி ஆகிய இருவருக்கும் புத்தகத்தின் முதல் இரண்டு பிரதிகள் வழங்கப்பட்டது
பெங்களூரு குடிநீர் மற்றும் வடிகால் வாரியத்தின் தலைவராக பணியாற்றும் டாக்டர் வி. ராம் பிரசாத் மனோகர் ஐஏஎஸ், தனது ஊக்கமளிக்கும் தனிப்பட்ட மற்றும் தொழில்முறை பரிணாமத்தை விவரிக்க இந்த அற்புதமான புத்தகத்தை படைத்துள்ளார்.
“கருவில் இருந்து கலெக்டர் வரை” என்ற தலைப்பில் இந்திய நிர்வாக சேவையில் ஒருவர் வாழ்க்கை முழுவதும் எதிர்கொள்ளும் சவால்கள், நெறிமுறை சிக்கல்கள் மற்றும் வெற்றிகளை மனதிற்கு நெருக்கமாக நமது கண்கள் முன்பு விவரிக்கிறது இந்த புத்தகம் இளைஞர்கள் மற்றும் சிவில் சர்வீஸ் ஆர்வலர்களுக்கு ஒரு வழிகாட்டியாக சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது, விடாமுயற்சி, பயனுள்ள தலைமைத்துவம் குறித்து எளிமையாக போதிக்கிறது.
ஆரம்பத்தில் எதுவும் தெரியாதவர்கள் கூட
சிறந்து விளங்க இடைவிடாமல் பின் தொடர்வது குறித்த நடைமுறை ஞானத்தை இந்த புத்தகம் வழங்குகிறது.
இந்த நிகழ்ச்சியில் ஏராளமான மாணவர்கள் அதிகாரிகள் புத்தக ஆர்வலர்கள் கலந்து கொண்டனர்.
