

சென்னை,ஜன.16- தமிழ் திரைப்பட பத்திரிகையாளர்கள் சங்கத்தின் பொங்கல் திருவிழா சென்னையில் நடந்தது. இவ்விழாவுக்கு சங்கத்தின் தலைவி கவிதா தலைமையேற்று நடத்தினார். இவ்விழாவில் சிறப்பு விருந்தினர்களாக பிரபல ஒளிப்பதிவாளர் பி.சி.ஶ்ரீராம், நடிகர் அக்ஷய் குமார், ஒளிப்பதிவளர் ரவி ஆகியோர் கலந்து கொண்டார்கள். விழாவுக்கு வந்து சிறப்பித்தவர்கள் சங்க செயலாளர் கோடங்கி ஆபிரஹாம் வரவேற்றுப் பேசினார். நிகழ்சியை சங்க அங்கத்தினர் செல்வி. சுஷ்மா தொகுத்து வழங்கினார். சங்கத்தின் தலைவி கவிதா ஒளிப்பதிவாளர் பி.சி.ஶ்ரீராமிடம் “உங்கள் வெற்றியின் ரகசியம் என்ன? என்று கேட்ட கேள்விக்கு பதிலளித்த ஶ்ரீராம், “தோல்விதான் எனது வெற்றிக்கு காரணம். தோல்விதான் வெற்றிக்கான தேடல்” என்றார். காதலைப்பற்றிய கேள்விக்கு பதிலளித்த பி.சி.ஶ்ரீராம், “ரகசியமாக இருந்தால் தான் அது காதல். பலருக்கும் அது தெரிந்துவிட்டால் சுவாரசியம் இருக்காது. காதலை மனதுக்குள் வைத்து போற்றி பாதுகாக்க வேண்டும்”. என்றார்
பி.சி.ஸ்ரீராமிடம் கேள்விகளை எழுப்பியபோது அதற்கு உற்சாகமாக பதில் அளித்தார்.
கேள்வி பதில் இதோ உங்கள் பார்வைக்கு.
“ஒளிப்பதிவு என்பதே வெளிச்சம் எனும்போது நீங்கள் மட்டும் ஏன் இருட்டை விரும்புகிறீர்கள்?”
” இருட்டு என்பது தனி உலகம். தியேட்டரில் பார்ப்பவர்களுக்கு அது வேறுமாதிரியான அனுபவத்தை தரும். எனவே நான் என்ன நினைக்கிறேனோ அதை செய்கிறேன். அதை போற்றினாலும் போற்றாவிட்டாலும் அதைப்பற்றி நான் சிந்திப்பதில்லை. ஏனெனில் ஒளி என்பது எனது தாய். நல்லா எடுக்கவில்லை
யென்றால் என்
வீட்டில் என்னை தொலைத்து விடுவார்கள்.”

“ஒளிப்பதிவு துறையில் உங்களுக்கு கிடைத்த முதல் பாராட்டு?”
“மற்ற படங்கள் மாதிரி இல்லாமல் உன் படங்கள் வேறு மாதிரி இருக்கிறது என்று என்னை உற்சாகப்படுத்தியவர்கள் என் தாய் தந்தை தான். அவர்கள் தான் என் கடவுள்.”
மீண்டும் படம்
இயக்குவீர்களா?”
“இன்றைய சினிமாவில் குழப்பங்கள் இருக்கிறது. அது ஏனென்று எனக்கு புரியவும் இல்லை . அது புரியவரும் காலகட்டம் வரும்போது நிச்சயமாக படம் இயக்குவேன். இது என் தமிழ்த் தாய் மீது ஆணை.”
“உங்களிடம் கேமரா கற்றவர்களில் நீங்கள் வியந்து பார்க்கும் உதவியாளர்கள் யார்?”
“என்னிடம் உதவி ஒளிப்பதிவாளர்களாக இருந்த அனைவரையும் எனக்கு பிடிக்கும் என்றாலும் ஜீவா, கே.வி.ஆனந்த்தின் திறமை ஆச்சர்யப்படுத்தியதுஅவர்கள் என்னுடன் இல்லையென்றாலும் அவர்களின் வாழ்க்கை எனக்கு பாடமாக இருந்தது.”
“உங்கள் வாழ்க்கை வரலாற்றை பதிவு செய்வீர்களா?”
“எனது வாழ்க்கை வரலாறு பற்றி பதிவு செய்யச் சொன்னால் செய்யமாட்டேன். ஏனெனில் வாழ்க்கை வரலாறு என்பது பொய். பொய் சொல்வதில் எனக்கு விருப்பமில்லை.”
“உங்கள் கலை வாழ்க்கை பற்றி?”
“எனது வாழ்க்கை தோல்விகளால் நிரம்பியது. திரைப்பட
கல்லூரியில் படிக்கும்போது “இதிலாவது பாஸ் பண்ணிடு” என்று அம்மா சொன்னார்கள். ஆனால் அப்போதும் ஃபெயில் ஆகி
விட்டேன். தோல்விக்கு பழக்கப்பட்டவன் என்பதால் தோல்வி என் தோழனாகி விட்டான்”
“உங்கள் கேமரா பார்வையில் லைட்டிங் வைத்தால் எந்த நடிகர் அழகாக இருப்பார்?”
“அழகுக்கு அளவுகோல்
இல்லை. என் கேமரா பார்வையில் எல்லோருமே அழகு தான். அழகு தான் இயற்கையின் படைப்பு.”
