சென்னையில் INAE மழலையர் பள்ளியை மாற்றம் அறக்கட்டளை நிறுவனர் திரு.சுஜித் குமார், மருத்துவர் சிவரஞ்சனி சந்தோஷ், INAE நிறுவனர்கள் முனைவர். நவீன் பிரசாத் லோகநாதன் மற்றும் மருத்துவர். பிரியதர்ஷினி துருவாசல் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

சென்னை கோட்டூர்புரத்தில் 1 முதல் 4 வயது வரையிலான குழந்தைகளுக்கான, ஆர்வத்தை அடிப்படையாகக் கொண்ட முன்பருவக் கல்வி முறையுடன் INAE மழலையர் பள்ளி தொடங்கப்பட்டுள்ளது. குழந்தைகளின் இயல்பான ஆர்வம், ஆராயும் மனப்பான்மை, கேள்வி எழுப்பும் திறன் மற்றும் விளையாட்டு வழிக் கற்றலை மையமாகக் கொண்ட புதிய முன்பருவக் கல்வி முறையை, INAE மழலையர் பள்ளி அறிமுகப்படுத்தியுள்ளது.

INAE பள்ளியின் தொடக்க விழாவில் மாற்றம் அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் இன்போசிஸ் சென்னை மனிதவளத் துறை துணைத் தலைவர் திரு. சுஜித் குமார் மற்றும் குழந்தைகள் நல மருத்துவரும் சமூக ஆர்வலருமான மரு.சிவரஞ்சனி சந்தோஷ் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

முனைவர். நவீன் பிரசாத் லோகநாதன் மற்றும் மருத்துவர். பிரியதர்ஷினி துருவாசல் ஆகியோரால் நிறுவப்பட்டுள்ள INAE மழலையர்பள்ளி, கல்வித் துறையில் நீண்டகால அனுபவத்தையும் குழந்தைகள் வளர்ச்சி குறித்த அறிவியல் சார்ந்த அணுகுமுறையையும் ஒருங்கிணைத்து, பாதுகாப்பான மற்றும் தரமான கற்றல் சூழலை உருவாக்கியுள்ளது.

INAE-யின் இணை நிறுவனர் மற்றும் நியூ பிரின்ஸ் கல்விக் குழுமத்தின் துணைத் தலைவருமான, முனைவர். நவீன் பிரசாத் லோகநாதன், 42 ஆண்டுகளாக கல்வித் துறையில் செயல்பட்டு வரும் நியூ பிரின்ஸ் கல்விக் குழுமத்தின் அனுபவத்தை INAE-யின் நிர்வாகம், உள்கட்டமைப்பு மற்றும் வளர்ச்சித் திட்டங்களில் பயன்படுத்தி, பள்ளியின் கல்வி நோக்கங்கள் வகுப்பறைகளில் முழுமையாக செயல்படுவதை உறுதி அளிக்கிறார்.

இணை நிறுவனர் மற்றும் கல்வி இயக்குநரான மருத்துவர். பிரியதர்ஷினி துருவாசல், குழந்தைகள் வளர்ச்சி நல மருத்துவராகப் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். குழந்தைகளின் வயது மற்றும் வளர்ச்சி நிலைக்கு ஏற்ற ஆர்வமூட்டும் பாடத்திட்டத்தை வடிவமைத்து, ஆசிரியர்களுக்கு பயிற்சி அளித்து, ஒவ்வொரு குழந்தையின் தனித்துவமான கற்றல் தேவைகளைப் புரிந்து செயல்படும் வகையில் வகுப்பறை நடைமுறைகளை உருவாக்கியுள்ளார்.

பாரம்பரிய ஆசிரியர் மையக் கற்பித்தல் முறையிலிருந்து மாறுபட்டு, குழந்தைகளின் இயல்பான ஆர்வமே கற்றலின் அடிப்படையாக இருக்க வேண்டும் என்பதே INAE-யின் கல்விக் கொள்கையாகும். வளர்ச்சி அறிவியலை அடிப்படையாகக் கொண்ட பாடத்திட்டத்தின் மூலம், குழந்தைகள் விளையாட்டு, ஆராய்ச்சி, கேள்விகள் மற்றும் கூட்டு செயல்பாடுகள் வழியாக கற்றுக்கொள்ள INAE – வில் ஊக்குவிக்கப்படுகின்றனர்.

மேலும், குழந்தைகளின் உணர்வு சமநிலை, சிந்தனை மற்றும் முடிவெடுக்கும் திறன், மொழித் திறன் உள்ளிட்ட அடிப்படை வளர்ச்சிகளை மேம்படுத்தும் வகையில் கற்றல் சூழல்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. இது வாழ்நாள் முழுவதும் கற்றலுக்கான வலுவான அடித்தளத்தை உருவாக்குகிறது.

நிகழ்ச்சியில் பேசிய நிறுவனர்கள், பாதுகாப்பான, மகிழ்ச்சியான மற்றும் ஊக்கமளிக்கும் கற்றல் சூழலை உருவாக்குவதன் மூலம், ஒவ்வொரு குழந்தையும் சுயமாகச் சிந்திக்கவும், தன்னம்பிக்கையுடன் ஆராயவும், கற்றலின் மீது நிலையான ஆர்வத்தை வளர்த்துக் கொள்ளவும் INAE மழலையர்பள்ளி உறுதுணையாக இருக்கும் என்று தெரிவித்தனர்.

Leave a Reply

error:

Discover more from view7media

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading