

HINDUSTAN CHAMBER OF COMMERCE – இன் 80 வது சேம்பர் தின கொண்டாட்டத்தில் HCC தலைவர் திரு. டி. ரமேஷ் துகார், அமைச்சர் திரு. டி.மனோ தங்கராஜ், திரு. மஹிந்தர் கே. ஜெயின் ஆகியோர் திரு.கே.ஆர் நாகராஜன், திரு. எஸ். ராமகிருஷ்ணன், திரு. சங்கர ராமன் அவர்களுக்கு விருதுகளை வழங்கினர்.
சென்னை, தாஜ் கன்னிமாரா நட்சத்திர விடுதியில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், தமிழ்நாடு பால்வளம் மற்றும் பால்துறை மேம்பாட்டுத் துறை அமைச்சர் திரு. டி. மனோ தங்கராஜ், அவர்கள் தலைமை விருந்தினராக கலந்து கொண்டு விழாவைச் சிறப்பித்தார்.
மேலும், ஆசியா இன்ஜினியரிங் நிறுவனத்தின் தலைவர் மற்றும் இணை நிறுவனர் திரு. மஹிந்தர் கே. ஜெயின் அவர்கள் கௌரவ விருந்தினராக கலந்து கொண்டார்.
அப்போது, ராம்ராஜ் காட்டன் நிறுவனத்திற்கு, வழங்கப்பட்ட சிறப்பான வர்த்தகத்திற்கான விருதை, அந்த நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைவர் திரு. கே.ஆர் நாகராஜன் அவர்கள் பெற்றுக்கொண்டார்.
அதேபோல், சமூக சேவைக்கான பங்களிப்பிற்காக, அமர் சேவா சங்கம் அமைப்பிற்கு வழங்கப்பட்ட விருதை, அந்த அமைப்பின் நிறுவனர் மற்றும் தலைவர் திரு. எஸ். ராமகிருஷ்ணன் அவர்களும், இணை நிறுவனர் மற்றும் செயலாளர் திரு. சங்கர ராமன் அவர்களும் அமைச்சரிடம் இருந்து பெற்றுக் கொண்டனர்.
HCC யின் 80வது சேம்பர் தின விழாவை சிறப்பாக ஒருங்கிணைத்து, வழிநடத்திய அவ்வமைப்பின் தலைவரும், துகார் ஃபைனான்ஸ் அண்ட் இன்வெஸ்ட்மென்ட் லிமிடெட் நிறுவனத்தின் மேலாண் இயக்குநரான திரு. டி. ரமேஷ் துகார், HINDUSTAN CHAMBER OF COMMERCE -யின் 80ஆம் ஆண்டை நினைவுகூரும் வகையில், சபைக்காக புதிய வளாகம் வாங்கப்பட்டு விரைவில் திறந்து வைக்கப்பட உள்ளது எனும் மகிழ்ச்சியான அறிவிப்பை இந்நிகழ்ச்சியில் வெளியிட்டார்.
கடந்த 80 ஆண்டுகளாக வர்த்தகம் மற்றும் தொழில் துறைகளில் சிறப்பான சேவையாற்றி வரும் ஒரு மதிப்புமிக்க அமைப்பான HINDUSTAN CHAMBER OF COMMERCE- யில், பல்வேறு வர்த்தக மற்றும் தொழில் துறைகளைச் சேர்ந்த 1000 க்கும் மேற்பட்டவர்கள் உறுப்பினர்களாக உள்ளனர்.
அத்தகைய சிறப்புமிக்க HINDUSTAN CHAMBER OF COMMERCE தனது 80வது சேம்பர் தின விழாவை மிகச் சிறப்பாகக் கொண்டாடியது. சிறப்பு வாய்ந்த இந்த சபைக்கு, துகார் ஃபைனான்ஸ் அண்ட் இன்வெஸ்ட்மென்ட் லிமிடெட் நிறுவனத்தின் மேலாண் இயக்குநரான திரு. டி. ரமேஷ் துகார், தற்போதைய தலைவராக உள்ளார். மேலும், அவர் Consultative Committee of City Chambers of Commerce (நகர வர்த்தகச் சபைகளின் ஆலோசனைக் குழு) வின் தலைமைப் பொறுப்பையும் வகித்து வருகிறார்.
HCC யின் நிகழ்ச்சிகளை இந்திய நாட்டின் முக்கிய தலைவர்கள், தொழிலதிபர்கள், மாநில ஆளுநர்கள், உயர் நீதிமன்ற நீதிபதிகள் மற்றும் பல்வேறு அரசு துறைகளின் செயலாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு சிறப்பித்துள்ளனர்.
2000ஆம் ஆண்டிலிருந்து ஒவ்வொரு ஆண்டும் சேம்பர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. மேலும், கொண்டாட்டத்தின்போது, வணிகத் திறமையிலும் சமூக சேவையிலும் சிறப்பாக பங்காற்றிய இரண்டு முக்கிய நபர்களை இச்சபை கௌரவித்து வருகிறது.
இச்சபையின் உறுதியான அடித்தளத்தை உருவாக்கி, தொடர்ந்து வழிகாட்டி ஆதரவு வழங்கியதற்காக, முன்னாள் தலைவர்கள் அனைவரும் கௌரவிக்கப்பட்டனர்.
