படத்தை ஓடிடி, டிஜிட்டலில் விற்பது சவாலாக உள்ளது மரகதமலை இசை வெளியீட்டு விழாவில் நடிகர் சந்தோஷ் பிரதாப் பேச்சு !!!
அறிமுக இயக்குநர் எஸ். லதா கதை, திரைக்கதை, வசனம், பாடல் எழுதி இயக்கியுள்ள திரைப்படம் “மரகதமலை”. எல்.ஜி மூவிஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த படம், சிறுவர்களுக்கான சாகச காட்சிகளையும் குடும்பத்துடன் ரசிக்கக்கூடிய அம்சங்களையும் இணைத்து அழகாக உருவாக்கப்பட்டுள்ளது. விரைவில் திரைக்கு வரவுள்ள இப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா, படக்குழுவினருடன் பல திரைப்பிரபலங்கள் கலந்து கொண்டு, பத்திரிக்கை மற்றும் ஊடக நண்பர்கள் முன்னிலையில் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வினில்.., இயக்குநர் R.கண்ணன் பேசியதாவது.., பத்திரிக்கை நண்பர்களுக்கும்…
