இசைஞானி இளையராஜா இசையில் மாரி செல்வராஜின் ‘மஞ்சணத்தி’ படப்பிடிப்பு தொடங்கியது!
இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில், இசைஞானி இளையராஜா இசையமைப்பில் உருவாகும் புதிய திரைப்படமான ‘மஞ்சணத்தி’ படத்தின் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது. மாரி செல்வராஜ் – இளையராஜா கூட்டணியில் உருவாகும் இப்படத்தின் அறிவிப்பு ஏற்கனவே ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், தற்போது படப்பிடிப்பு பணிகள் தொடங்கியுள்ளன. தன் திரைப்படங்களின் மூலம் தனது சொந்த வாழ்வியலுடன் நெருக்கமான கதையை மிக இயல்பாகவும் உணர்வுப்பூர்வமாகவும் பதிவு செய்துவரும் இயக்குனர் மாரி செல்வராஜ், ‘மஞ்சணத்தி’ திரைப்படத்திலும் மண்ணின் மணம் வீசும் கதைக்களத்தை கையாள்கிறார்…
