IMW|Mr.Miss & Mrs Tamizhagam2025 Title Winners| Mr.Jeeva |Miss.Malavika|Mrs.Divya|Chennai

இந்தியன் மீடியா வொர்க்ஸ் நடத்திய Mr Miss & Mrs Tamizhagam 2025, Mr Tamizhagam பட்டத்தை தமிழ்நாட்டைச் சேர்ந்த ஜீவா மற்றும் சிங்காரவேல் வென்றனர். Miss Tamizhagam பட்டத்தை கேரளாவைச் சேர்ந்த மாளவிகா மற்றும் தமிழ்நாட்டைச் சேர்ந்த யுவேதா வென்றனர்.Mrs Tamizhagam பட்டத்தை தமிழ்நாட்டைச் சேர்ந்த திவ்யா மற்றும் பபீனா வென்றனர்.

இந்த நிகழ்வில் தமிழ்நாடு, கேரளா மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்களிலிருந்து போட்டியாளர்கள் உற்சாகமாக கலந்து கொண்டனர். இதனால் இந்நிகழ்வு ஒரு மாபெரும், சிறப்புமிக்க நிகழ்வாக அமைந்தது.

பிரமாண்டமாக நடைபெற்ற இந்த போட்டியில் Mr Tamizhagam 2025 பட்டத்தை ஜீவா கைப்பற்றினார்.
Miss Tamizhagam 2025 பட்டத்தை மாளவிகா வென்றார்.
Mrs Tamizhagam 2025 பட்டத்தை திவ்யா பெற்றார்.
Mr Tamizhagam பிரிவில் 1ஆம் ரன்னர் அப்– சிங்காரவேல்.
Miss பிரிவில் 2ஆம் ரன்னர் அப் – யுவேதா,
மேலும் Miss Goddess பட்டம் – அன்புவிழி.
Mrs Tamizhagam பிரிவில் 1ஆம் ரன்னர் அப் – பபீனா கைப்பற்றினர்.

Mr Miss & Mrs Tamizhagam 2025 பட்டதாரர்களுக்கு நடிகை அனுஷா, ஃபேஷன் லார்ட் மணிகண்டன் மற்றும் பிரபல ஃபேஷன் வடிவமைப்பாளர் சுபாகத் அலி ஆகியோர் சாஷ் மற்றும் பரிசுகளை வழங்கி கௌரவித்தனர். இந்த நிகழ்விற்கு முன்னணி பிரபல ஃபேஷன் நடன இயக்குநர் ஃபஹீம் அவர்களின் சிறப்பான கொரியோகிராஃபி உயிர் ஊட்டியது.

பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய இந்தியன் மீடியா வொர்க்ஸ் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் திரு. ஜான் அமலன், Mr Miss & Mrs Tamizhagam 2025 இந்த ஆண்டு மிகுந்த பிரம்மாண்டத்துடனும், சிறப்புடனும் நடத்தப்பட்டதாக தெரிவித்தார். இந்த ஆண்டின் வெற்றியாளர்கள் அசாதாரண திறமைகள் கொண்டவர்கள் என்றும், அவர்கள் நாளைய மிகப் பெரிய நட்சத்திரங்களாக மாறப்போகிறார்கள் என்றும் அவர் உறுதியாக நம்புவதாக கூறினார். அதற்காகவே, இந்த மதிப்புமிக்க பட்டங்களுக்கு மிகச் சிறந்த மற்றும் தகுதியான போட்டியாளர்களையே இந்தியன் மீடியா வொர்க்ஸ் தேர்வு செய்துள்ளதாகவும், மேலும் இந்த அழகுப் போட்டியின் பட்டதாரர்கள் தேசிய அளவிலான போட்டிகளுக்கு பரிந்துரைக்கப்படுவார்கள் என்பதையும் பெருமையுடன் அறிவித்தார்.

Leave a Reply

error:

Discover more from view7media

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading