“யூத்” (youth) திரைப்பட முன் வெளியீட்டு விழா நிகழ்வு

A large group photo of a diverse team of individuals, likely a film cast and crew, gathered on stage for an event or premiere.

பார்வதா என்டர்மெய்ன்மென்ட் நிறுவனம் சார்பில் கருப்பையா சி. ராம் தயாரிப்பில், ‘அசுரன்’, ‘விடுதலை 2’ திரைப்படங்களின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமான கென் கருணாஸ் நாயகனாக நடித்து இயக்க, பள்ளி பருவ வாழ்க்கையை மையமாக கொண்டு உருவாகியுள்ள திரைப்படம் “யூத்”.

அனிஷ்மா மற்றும் மீனாட்சி தினேஷ், பிரியன்ஷி யாதவ்,ஆகியோர் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். தேவதர்ஷினி மற்றும் சுராஜ் வெஞ்சாரமூடு ஆகியோர் இந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இந்தப் படத்திற்கு ஜி.வி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.’யூத்’ திரைப்படத்தை முதல் பாடலான ‘முட்ட கலக்கி’ ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. ‘பறந்தனே பெண்ணே’ பாடலை கென் கருணாஸ் பாடியிருந்தார். 3வது பாடலான ‘ஆச புள்ள’ வெளியாகி வைரலானது. இப்பாடலை ஜி.வி.பிரகாஷ் பாடியுள்ளார்.

இந்தப் படம் மார்ச் 19-ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது.

இந்நிலையில் இப்படத்தின் திரைப்பட முன் வெளியீட்டு விழா படக்குழுவினருடன் திரை பிரபலங்கள் கலந்துகொள்ள பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் வெகு விமரிசையாக நடைபெற்றது.

இந்நிகழ்வினில்

நடிகை நளினி பேசியதாவது..,

நான் சினிமாவில் நடிக்கவே மாட்டேன் என்று முடிவு செய்திருந்தேன். ஆனால் கருணாஸ் சார் மற்றும் அவர்களின் மகன் கென் என்னை அழைத்து இந்த ‘யூத்’ படத்தில் நடிக்க வைத்தார். முதலில் ஒரு சிறிய வேஷம் தான் என்று நினைத்தேன். ஆனால் இந்த படத்தில் நடிக்கும்போது நான் மீண்டும் ஒரு புதிய அனுபவம் பெற்றேன். ஷூட்டிங்கில் அவர்கள் என்னை மிகவும் கவனமாக கையாண்டு, என் நடிப்பை மேலும் மெருகேற்றி வைத்தார். அதனால் மீண்டும் சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆர்வம் எனக்கு வந்துவிட்டது.

இந்த ‘யூத்’ பட டீம் மிகவும் எனர்ஜியாக வேலை செய்கிறார்கள். கொஞ்சம் கூட ஓய்வு எடுக்காமல் தொடர்ந்து ஷூட்டிங் செய்வார்கள். அதுதான் கொஞ்சம் கஷ்டமாக இருந்தாலும், அவர்கள் அர்ப்பணிப்பு பார்க்கும்போது மகிழ்ச்சி தான். என் வாழ்க்கையில் நான் முதன்முறையாக டப்பிங் தியேட்டருக்கு போய் டப்பிங் பேசினேன். அதற்கும் இந்த படக்குழுவே காரணம். இந்த படத்தில் என்னை மீண்டும் அறிமுகப்படுத்திய கென்னுக்கும், கருணாஸ் அவர்களுக்கும், முழு யூத் டீமுக்கும் என் மனமார்ந்த நன்றி. கடவுள் உங்களுக்கு இன்னும் பெரிய வெற்றிகளை கொடுக்கட்டும்.

நடிகை தேவதர்ஷிணி பேசியதாவது..,

யூத் படத்தின் ஹீரோ கேன் கருணாஸுக்கு முதலில் வாழ்த்துகள். இந்த படத்தில் அவருடைய முயற்சி மிகவும் சிறப்பாக இருக்கிறது. இந்த படத்திற்கு இசையமைத்த ஜிவி பிரகாஷ் இசை மிகவும் அருமையாக அமைந்துள்ளது. இந்த படத்தில் அவர் இசை ரசிகர்களை கவரும். நளினி மேடம் டிவி ஷீட்டிங்கில் 6மணிக்கு கிளம்பி விடுவார் ஆனால், இப்படத்தில் காலை முதல் இரவு வரை தொடர்ந்து டயலாக் படித்து, முழு ஈடுபாட்டுடன் பணியாற்றியதை பார்த்து மிகவும் ஆச்சரியமாக இருந்தது.

கென் கருணாஸை ஒரு நடிகராக பார்த்திருக்கிறோம். ஆனால் இந்த படத்தில் அவர் ஒரு இயக்குநராக இன்னும் பெரிய அளவில் பிரகாசிப்பார். இந்த படம் வெளியான பிறகு, நடிகர் கென்னை விட இயக்குநர் கென்னை மக்கள் அதிகமாக பாராட்டுவார்கள்”சுராஜ் சாருடன் பணியாற்றியது மிக அருமையான அனுபவம். இந்த படத்தில் அவர் தான் ஒரிஜினல் ஹீரோ, கலக்கியிருக்கிறார்
“இந்த படத்தின் மூலம் பலருக்கு வாய்ப்பு கொடுத்த கேன் கருணாஸுக்கு நன்றி. இந்த ‘யூத்’ படக்குழுவுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்”.

நடிகை மீனாட்சி தினேஷ் பேசியதாவது..,

யூத் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது மிகவும் சந்தோஷமாக உள்ளது.“என் வாழ்க்கையில் லக் ஒன்றே இல்லை என்று நினைத்தேன். ஆனால் கென்னை சந்தித்த பிறகு தான் எனக்கு லக் வந்தது போல உணர்கிறேன். இந்த படத்தில் என்னை தேர்வு செய்ததற்கு அவருக்கு நன்றி”. தனுஷ் மற்றும் வெற்றிமாறன் போன்ற பெரிய கலைஞர்கள் முன்னிலையில் இந்த மேடையில் நிற்பது கனவு நனவானது போல இருக்கிறது.

தயாரிப்பாளர் கருப்பையாவுக்கும், ஒளிப்பதிவாளர் விக்கி சாருக்கும் பெரிய நன்றி இந்த படக்குழு ஒரு குடும்பம் போல இருந்தது என்றும் அனைவரும் மிகவும் அன்பாக நடந்து கொண்டார்கள், சுராஜ் சார், நளினி மேடம் மற்றும் மற்ற நடிகர்களுடன் பணியாற்றியது மிகுந்த மகிழ்ச்சி. அனைவருக்கும் நன்றி.

நடிகை பிரியன்ஷி யாதவ் பேசியதாவது..,

A woman wearing a striped saree with a yellow border, smiling and holding a phone, against a colorful background.

இந்த படம் எங்களுக்கு ஒரு கனவு திட்டம். இந்த படம் எங்களுக்கு மிகவும் முக்கியமானது. படப்பிடிப்பு நேரத்திலேயே இந்த படம் எப்போது ரிலீஸ் ஆகும் என்று பேசிக்கொண்டே இருப்போம். இந்த படத்தில் நடிக்க வாய்ப்பு கொடுத்த கென்னுக்கு மிகவும் நன்றி. தமிழ் மொழி தெரியாதிருந்தாலும், படக்குழுவில் இருந்த டீம், முழு யூனிட்டும் மிகவும் அன்பாக நடந்துகொண்டார்கள். நாங்கள் அனைவரும் மிகவும் நேர்மையாக உழைத்திருக்கிறோம். இந்த படத்தை நீங்கள் அனைவரும் ஆதரிக்க வேண்டும், நன்றி.

நடிகை அனிஷ்மா பேசியதாவது..,

“எனக்கு இந்த மேடையில் நிற்பதே மிகவும் பதட்டமாக இருக்கிறது. இத்தனை பெரிய ரசிகர்கள் முன்னால் பேசுவது ஒரு பெரிய அனுபவம். இந்த படத்தில் என்னை நடிக்க வைத்த கென்னுக்கு மிகவும் நன்றி. இது என்னுடைய கனவு திரைப்படம் போல தான்.
கென் இந்த வயதிலேயே மிகவும் கடினமாக உழைத்து இந்த படத்தை உருவாக்கியிருக்கிறார். அவரைப் பார்த்து எனக்கு மிகவும் பெருமையாக இருக்கிறது. இந்த படம் அவருடைய வாழ்க்கையை இன்னும் பெரிய அளவில் மாற்றும் என்று நம்புகிறேன்”.

தயாரிப்பாளர் கருப்பையா, மற்றும் இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் ஆகியோருக்கும் நன்றி. “ஜி.வி. பிரகாஷ் சார் இசைக்கு நான் பெரிய ரசிகை. அவருடைய பாடல்களுக்கு வீட்டிலேயே டான்ஸ் ஆடியிருக்கிறேன். இன்று அவருடைய இசையில் நான் நடித்திருப்பது எனக்கு மிகவும் சந்தோஷம். மேலும், சுராஜ் சார், தேவதர்ஷிணி மேடம் மற்றும் முழு படக்குழுவுக்கும் நன்றி, இந்த படம் அனைவருக்காகவும் வெற்றி பெற வேண்டும்.

நடிகர் சுராஜ் பேசியதாவது..,

எல்லா தமிழ் மக்களுக்கும் வணக்கம். இது என்னுடைய இரண்டாவது தமிழ் திரைப்படம். இந்த படத்தில் இப்படியான ஒரு கேரக்டரை கொடுத்த இயக்குநர் கென்னுக்கும், தயாரிப்பாளர் கருப்பையாவுக்கும் என் நன்றிகள். இந்த படத்தில் நடித்த அனைவரும் மிகச் சிறப்பாக நடித்திருக்கிறார்கள். தேவதர்ஷினி மேம், நளினி மேம் போன்ற அனுபவமுள்ள நடிகைகளுடன் வேலை செய்தது மகிழ்ச்சி. அதேபோல் அனிஷ்மா, மீனாட்சி, பிரியாஞ்சி ஆகிய ஹீரோயின்களும் மிக அழகாக நடித்திருக்கிறார்கள். சின்னாவின் மிமிக்ரி திறமை எனக்கு மிகவும் பிடிக்கும்.

கென் கேரளா வந்து கதையை சொன்னபோது ஒவ்வொரு கேரக்டரின் உணர்ச்சிகளையும் நடித்துக் காட்டி கதையை விவரித்தார். கூடவே மொபைலில் படம் முழுவதையும் முன்கூட்டியே எடுத்துக் காட்டினார். அப்போதே படம் பார்த்த மாதிரி உணர்வு வந்தது. கென் ஸ்கிரீன் பிரெஸன்ஸும், சிரிப்பும் எனக்கு மிகவும் பிடிக்கும். எதிர்காலத்தில் அவர் ஒரு பெரிய நட்சத்திரமாக மாறுவார் என்பது உறுதி. இந்த படத்திற்கு தயாரிப்பாளர் மிகப் பெரிய ஆதரவு கொடுத்துள்ளார். அவரும் தமிழில் பெரிய தயாரிப்பாளராக வளர வேண்டும் என்று வாழ்த்துகிறேன். மேலும் இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் சார் இசை மிகவும் அருமையாக உள்ளது. அவருடைய இசைக்கு நான் பெரிய ரசிகன்.

இந்த நிகழ்ச்சிக்கு வந்த நடிகர் தனுஷ் சார் மற்றும் இயக்குநர் வெற்றிமாறன் சார் ஆகியோருக்கும் நன்றி. வெற்றிமாறன் சார் இயக்கிய படங்கள் அனைத்தையும் பார்த்திருக்கிறேன் என்றும், அவருடன் ஒரு நாள் வேலை செய்ய வேண்டும் என்பது என் ஆசை. “இந்த ‘யூத்’ படத்தில் நம்ம வாழ்க்கையில் நடக்கும் பல விஷயங்கள் இருக்கும். மார்ச் 19 அன்று இந்த படம் திரையரங்குகளில் வெளியாகிறது. அனைவரும் திரையரங்குக்கு வந்து ஆதரிக்க வேண்டும்” நன்றி.

நடிகர் கருணாஸ் பேசியதாவது..,

இந்த நிகழ்வில் நடிகர் தனுஷ் மற்றும் இயக்குநர் வெற்றிமாறன் இருவரும் ஒன்றாக இருப்பது மிகவும் பெருமையான தருணம். “கென்னை ஒரு நடிகராக அடையாளப்படுத்தியது வெற்றிமாறன். அதே நேரத்தில் அவரிடம் இருந்து இயக்கம் கற்றுக்கொள்ள வாய்ப்பு கொடுத்தது தனுஷ். இந்த இருவரும் இங்கே வந்து அவனுக்காக நிற்பது எங்களுக்கு மிகப் பெரிய மகிழ்ச்சி”

தனுஷ் “நான் அவரை முதன்முதலாக சந்தித்த போது அவர் மிகவும் இளம் வயதில் இருந்தார். ‘காதல் கொண்டேன்’ படத்தை பார்த்த பிறகு, தமிழ் சினிமாவுக்கு ஒரு பெரிய நடிகர் கிடைத்திருக்கிறார் என்று நான் சொன்னேன். இன்று இந்திய சினிமாவில் இரண்டு தேசிய விருதுகளை பெற்ற நடிகர் என்ற பெருமையை தனுஷ் பெற்றுள்ளார்”.

“நான் சிறு வயதிலிருந்தே மேடைகளில் இருந்து மக்களை சந்தித்து வருகிறேன். சினிமாவை நாம் உண்மையாக நேசித்தால், சினிமா ஒருபோதும் நம்மை கைவிடாது என்று நான் நம்புகிறேன்” கென் இந்த படத்தை உருவாக்க மிகவும் கடினமாக உழைத்துள்ளார், தயாரிப்பாளர் கருப்பையா மற்றும் அவரது குழுவினர் இந்த படத்தை மிகுந்த அர்ப்பணிப்புடன் உருவாக்கியுள்ளனர். இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் சம்பளம் கேட்காமல் இந்த படத்திற்கு இசை அமைத்ததற்கு நன்றி. இறுதியாக, “இந்த படத்தில் பணியாற்றிய ஒவ்வொருவருக்கும் என் குடும்பத்தின் சார்பாக நன்றி. ‘யூத்’ படம் அனைவருக்கும் பிடிக்கும் என்று நம்புகிறேன்” நன்றி.

A man with glasses smiling and holding a microphone while speaking on stage, wearing a striped shirt.

தயாரிப்பாளர் கருப்பையா பேசியதாவது..,
கென்னை எனக்கு நல்ல பழக்கம் அவர் கதை வைத்து சுற்றிக்கொண்டிருந்த போது நானும் படம் செய்ய சுற்றிக் கொண்டிருந்தேன். ஒரு தயாரிப்பில் என்னை செய்ய சொன்னபோது நான் கென் கதையை முதலில் செய்யலாம் என முடிவு செய்து கதை கேட்டேன் கதை எனக்கு மிகவும் பிடித்தது. பின் அந்த தயாரிப்பு நிறுவனம் வாங்கியது. ஆனால் இந்தப்படத்தை விட மனமில்லை என்ன ஆனாலும் ஓகே என நானே இப்படத்தை ஆரம்பித்தேன். கென் அற்புதமாக இப்படத்தை உருவாக்கி தந்தார். படம் விற்பனையும் ஆகிவிட்டது. படம் மிக நன்றாக வந்துள்ளது. இந்த பயணத்தில் துணை நின்ற அனைவருக்கும் நன்றி. என் குடும்பத்தாருக்கு நன்றி.
இப்படத்தில் பணியாற்றிய சுராஜ் சார், நாயகிகள் உட்பட நடிகர்கள் மற்றும் கலைஞர்களுக்கு நன்றி. நான் தனுஷ் சாரின் தீவிர ரசிகன் அவர் வந்து வாழ்த்தியது பெருமை. வெற்றிமாறன் சாருக்கு மிகப்பெரிய நன்றி அனைவருக்கும் நன்றி.

இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் பேசியதாவது…

A man with curly hair and a beard speaks into a microphone, wearing a black hoodie.

“தனுஷ் மற்றும் வெற்றிமாறன் போன்ற மிகவும் ஸ்ட்ரிக்ட் டைரக்டர்களிடம் கற்றுக்கொண்ட ஒரு பையன் தான் கென். ஆனால் அவர் ஒரு பேக் பெஞ்சர் மாதிரி ஜாலியாக ஒரு யூத் படத்தை எடுத்திருக்கிறார். பள்ளி பின்னணியில் பசங்களின் வாழ்க்கையை வைத்து ஒரு கலகலப்பான படம் பண்ணியிருக்கிறார் கருணாஸ் மூலம் தான் இந்த படத்தில் இசையமைக்க வாய்ப்பு கிடைத்தது, நான் முதல் படத்தில் நடிக்கும் போது அவரிடம் இருந்து தன்னுக்கு நிறைய நம்பிக்கை கிடைத்தது, அதற்காகவே அவர் மகன் படத்தில் வேலை செய்ய நினைத்தேன்.

இந்த படத்தில் நடித்த தேவதர்ஷினி, நளினி, சுராஜ் மற்றும் மூன்று ஹீரோயின்களான பிரியாஞ்சி, மீனாட்சி, அனிஷ்மா எல்லோரும் மிகச்சிறப்பாக நடித்துள்ளனர். ‘யூத்’ படம் கண்டிப்பாக ஒரு நல்ல யூத் என்டர்டெயினராக இருக்கும். இந்த படக்குழுவுக்கு என் வாழ்த்துகள். படம் பெரிய வெற்றி பெற வேண்டும்” நன்றி.

இயக்குநர் வெற்றிமாறன் பேசியதாவது..,

A man with a beard speaks at a podium during an event, with a blue sign displaying 'Ken in Youth' behind him.

“இவ்வளவு பாசிட்டிவாக ஒரு முழு யூனிட்டாக வேலை செய்வது எல்லா படங்களிலும் நடக்காது. சில படங்களுக்கே அது அமையும். ஒரு டீம் இப்படியாக ஒன்றுபடுவதற்கு முக்கிய காரணம் அந்த படத்தை வழிநடத்தும் இயக்குநரின் நம்பிக்கையும் மனநிலையும் தான்” கென்னுக்கு என் வாழ்த்துக்கள். கென் கதை சொல்லிய விதம் மிகவும் சிறப்பாக இருந்தது, ஒவ்வொரு காட்சிக்கும் இசை மற்றும் உணர்வுகளை இணைத்து மிகவும் மெட்டிக்குலஸாக கதையை விளக்கினார்.

“கென் ஒரு நடிகராகவும், இயக்குநராகவும் தானாக உருவான ஒருவராக இருக்கிறார். அவருக்கு தனுஷ் அளித்த நம்பிக்கையும் ஆதரவும் அவருக்கு பெரிய தைரியம் கொடுத்துள்ளது”. என்னைவிட தனுஷ் அவரை அதிகம் நம்பினார் செதுக்கியிருக்கிறார்.“கருணாஸ் மற்றும் கிரேஸ் அவர்களுக்கு இது மிகவும் பெருமையான தருணம். இந்த ‘யூத்’ படம் கண்டிப்பாக நல்ல வெற்றி பெறும் என்று நம்புகிறேன்” வாழ்த்துக்கள்.

இயக்குநர் நடிகர் கென் கருணாஸ் பேசியதாவது..,

Two men seated in a theater, one with a beard wearing a brown shirt, and the other smiling in a white sweater.

“இந்த படத்தில் என்னை நம்பி நடித்த அனைத்து கலைஞர்களுக்கும், தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் நான் மிகவும் நன்றி சொல்லிக் கொள்கிறேன். நீங்கள் இல்லாமல் இந்த படம் உருவாகியிருக்காது. என்னை முதலில் நடிகராக அறிமுகப்படுத்திய மறைந்த இயக்குநர் தாமிரா அவர்களை நினைவுகூறுகிறேன் அவர் ஆசிர்வாதம் இருக்குமென நம்புகிறேன். அதேபோல் இயக்குநர் வெற்றிமாறன் எனது திறமையை கண்டுபிடித்து ஊக்கமளித்தவர் அவருக்கு நன்றி.

தனுஷ் சார் தெரிந்தோ தெரியாமலோ அவர் எனக்கு நிறைய கற்றுக்கொடுத்திருக்கிறார். இன்று நான் இயக்குநராக இந்த மேடையில் நிற்பதற்கு அவர் ஒரு முக்கிய காரணம்” அவருக்கு என் நன்றி. அவர் முன்னால் நான் இயக்குநராக மேடையில் நிற்பது பெருமை. இந்த படத்தை தயாரித்த கருப்பையா மற்றும் அவரது குழுவினருக்கும், இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் அளித்த ஆதரவுக்கும் நன்றி. இந்த ‘யூத்’ படம் மார்ச் 19 அன்று வெளியாகிறது. அனைவரும் திரையரங்குகளில் வந்து இந்த படத்தை பார்த்து ஆதரிக்க வேண்டும் நன்றி.

கிரேஸ் கருணாஸ் பேசியதாவது…,

A man speaking into a microphone while wearing a white shirt and gold jewelry, with a well-groomed beard and glasses.

தனுஷ் மற்றும் இயக்குநர் வெற்றிமாறன் ஆகியோருக்கு மனமார்ந்த நன்றி.அசுரன் படத்தின் போது கென்னுக்கு ஒரு கேரக்டர் கிடைத்தபோது, அவர் படப்பிடிப்பிலும் படிப்பிலும் ஒரே நேரத்தில் செய்ய முடியுமா என்ற கேள்வி இருந்தது, ஆனால் அந்த வாய்ப்பு அவருக்கு பெரிய அனுபவமாக அமைந்தது..

“ஒரு நடிகன் நல்லா நடித்தான் என்று சொல்வது பெரிய விஷயம் இல்லை. அந்த கேரக்டரை அவனைத் தவிர வேறு யாராலும் செய்ய முடியாது என்று மக்கள் நினைத்தால் தான் அவர் உண்மையான நடிகன். தனுஷ் நடிப்பில் ஒரு “யூனிவர்சிட்டி” போல கென், அவருடன் இருந்தாலே நிறைய விஷயங்களை கற்றுக்கொள்ள முடிந்தது. இந்த நிகழ்ச்சிக்கு தனுஷ் வந்திருப்பது நம்பமுடியாத கனவு போல உள்ளது. இந்த ‘யூத்’ படம் மார்ச் 19 அன்று வெளியாகிறது. தயாரிப்பாளர் பெரிய அளவில் முதலீடு செய்து இந்த படத்தை எடுத்திருக்கிறார். அனைவரும் திரையரங்குகளில் வந்து பார்த்து ஆதரிக்க வேண்டும்” நன்றி.

நடிகர் தனுஷ் பேசியதாவது..,

A man smiling while holding a microphone, wearing a black shirt and speaking at an event.

முதலில் தயாரிப்பாளர் கருப்பையாவுக்கு பாராடுக்கள். “23 வயது இளைஞன் சொன்ன கதையை நம்பி இந்த படத்தை தயாரித்தது மிகப் பெரிய தைரியம். நாளை இந்த படம் பெரிய வெற்றி பெற்றாலும் அந்த வெற்றியின் முதல் உரிமையாளர் கருப்பையாதான்”. கென் எப்போதும் அவருக்கு உண்மையாக இருக்க வேண்டும்.

ஒரு படத்திற்கு ஒரு அடையாளம் இருக்கும். ‘துள்ளுவதோ இளமை’ படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா எப்படி இருந்தாரோ, அதேபோல் ‘யூத்’ படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் ஒரு முக்கியமான அடையாளமாக இருக்கிறார். பணம் வாங்காமல் அவர் இசையமைத்தது தந்தது அவரது பெருமை. அவருக்கு கென் சார்பில் என் நன்றி.

படத்தில் நடித்த சுராஜ், தேவதர்ஷினி, நளினி மற்றும் மூன்று ஹீரோயின்களுக்கும் வாழ்த்துகள். அனிஷ்மா சிறை படத்தில் மிகச்சிறப்பாக நடித்திருந்தார் வாழ்த்துக்கள். ஒளிப்பதிவாளர் விக்கி மற்றும் காஸ்ட்யூம் டிசைனர் ஆகியோர் இந்த படத்திற்கு ஒரு பெரிய வலிமையாக உள்ளனர்.

அசுரன் படத்தில் முதலில் கென்னைப் பார்த்தபோது எனக்கு நம்பிக்கை இல்லை. அவரை வேண்டாம் என்று தான் சொன்னேன். ஆனால் முதல் ஷாட்டிலேயே அவர் மிகுந்த நம்பிக்கையுடன் நடித்ததை பார்த்து நான் ஆச்சரியப்பட்டேன். அவரை கண்டுபிடித்த பெருமை முழுவதும் வெற்றிமாறனுக்கே சேரும்.

இந்த வயதிலேயே இவ்வளவு தைரியமாக படம் எடுக்க முடிவு செய்தது பெரிய விஷயம். அவர் படமெடுக்கிறேன் என்று சொன்ன போது, நான் இப்போது வேண்டாமே என்றேன் ஆனா அதை
தவறென்று நிரூபித்திருக்கிறார்.

“முன்னாடி நாங்கள் சினிமாவுக்கு வந்த போது, சீனியர்களை பார்த்து கற்றுக்கொள்ள வேண்டும் என்று சொல்லுவார்கள். ஆனால் இப்போது காலம் மாறிவிட்டது. இன்றைய இளம் தலைமுறை 20–25 வயதிலேயே மிக வேகமாக முன்னேறுகிறார்கள். இப்போது நாங்கள்தான் அவர்களிடம் இருந்து கற்றுக்கொள்ள வேண்டும். கென் இந்த வயதில் இவ்வளவு பெரிய பொறுப்புடன் ஒரு படத்தை இயக்குவது சாதாரண விஷயம் இல்லை. அவருடைய உழைப்பும் நம்பிக்கையும் பாராட்டத்தக்கது. இந்த வயதில் பலர் வேறு விஷயங்களில் கவனம் செலுத்துவார்கள். ஆனால் கேன் தனது கவனத்தை முழுவதும் தனது கனவு மற்றும் குடும்பத்தின் மீது வைத்திருக்கிறார். அதற்காக அவருக்கு வாழ்த்துகள். யூத் படம் பெரிய வெற்றி பெற்று, கேனுக்கும் அவரை நம்பி வந்த முழு படக்குழுவுக்கும் ஒரு பெரிய ஆசீர்வாதமாக அமைய வேண்டும் வாழ்த்துக்கள்.

பள்ளி பருவ வாழ்க்கையை மையமாக கொண்டு உருவாகியுள்ள “யூத்” திரைப்படம், மார்ச் 19-ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது.

Leave a Reply

error:

Discover more from view7media

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading