நடிகர் மோகன்லாலின் திரைப்பயணத்தை கொண்டாடும் விதமாக, ஜியோஹாட்ஸ்டார் ‘மோகன்லால் – தி கம்ப்ளீட் ஆக்டர்’ திரைப்பட விழாவில் 115 கல்ட் கிளாசிக்ஸ் மற்றும் பிளாக்பஸ்டர் படங்களை ஸ்ட்ரீம் செய்து கொண்டாடுகிறது!
இந்திய சினிமாவின் மிகச் சிறந்த நடிகர்களில் ஒருவராக திகழும் மோகன்லாலின் நாற்பது ஆண்டுகளுக்கும் மேற்பட்ட திரைப்பட பயணத்தை அவரின் தேர்ந்தெடுக்கப்பட்ட படங்களுடன் கொண்டாடுகிறது ஜியோஹாட்ஸ்டார். கொச்சி, மே 2026: லெஜெண்ட்ரி நடிகர் மோகன்லாலின் பிறந்தநாளை முன்னிட்டு ‘மோகன்லால்- தி கம்ப்ளீட் ஆக்டர்’ என்ற சிறப்பு திரைப்பட விழாவை மே 20 முதல் 30 வரை ஜியோஹாட்ஸ்டார் ஸ்ட்ரீம் செய்கிறது. மோகன்லாலின் நாற்பது ஆண்டுகால திரைப்பட வாழ்க்கையை கொண்டாடும் விதமாக அவரது 115 முக்கியமான படங்கள் ஸ்ட்ரீம் செய்யப்படுகிறது….
