சென்னையில் INAE மழலையர் பள்ளியை மாற்றம் அறக்கட்டளை நிறுவனர் திரு.சுஜித் குமார், மருத்துவர் சிவரஞ்சனி சந்தோஷ், INAE நிறுவனர்கள் முனைவர். நவீன் பிரசாத் லோகநாதன் மற்றும் மருத்துவர். பிரியதர்ஷினி துருவாசல் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
சென்னை கோட்டூர்புரத்தில் 1 முதல் 4 வயது வரையிலான குழந்தைகளுக்கான, ஆர்வத்தை அடிப்படையாகக் கொண்ட முன்பருவக் கல்வி முறையுடன் INAE மழலையர் பள்ளி தொடங்கப்பட்டுள்ளது. குழந்தைகளின் இயல்பான ஆர்வம், ஆராயும் மனப்பான்மை, கேள்வி எழுப்பும் திறன் மற்றும் விளையாட்டு வழிக் கற்றலை மையமாகக் கொண்ட புதிய முன்பருவக் கல்வி முறையை, INAE மழலையர் பள்ளி அறிமுகப்படுத்தியுள்ளது. INAE பள்ளியின் தொடக்க விழாவில் மாற்றம் அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் இன்போசிஸ் சென்னை மனிதவளத் துறை துணைத் தலைவர் திரு….
