
பூக்கி” திரைப்பட பத்திரிக்கையாளர் சந்திப்பு !!
Vijay Antony Film Corporation சார்பில், ஃபாத்திமா விஜய் ஆண்டனி தயாரிப்பில், மீரா விஜய் ஆண்டனி வழங்கும், அஜய் திஷான் நடிப்பில், அறிமுக இயக்குநர் கணேஷ் சந்திரா இயக்கத்தில், ரொமான்ஸ் காமெடி ஜானரில், இளைஞர்களை கவரும் படைப்பாக உருவாகியுள்ள திரைப்படம் “பூக்கி”. இப்படம் காதலர் தினக் கொண்டாட்டமாக வரும் 2026 பிப்ரவரி 13 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது.
பட வெளியீட்டை முன்னிட்டு படக்குழுவினர் பத்திரிக்கை ஊடக நண்பர்களைச் சந்தித்து படம் குறித்த தகவல்களை பகிர்ந்து கொண்டனர்.

இந்நிகழ்வினில்
தயாரிப்பாளர் விஜய் ஆண்டனி பேசியதாவது..,
நீங்கள் இல்லாமல் நான் இல்லை. எப்போதும் எனக்கு துணையாக இருந்த அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி. இந்த விழாவின் நாயகன் கணேஷ் சந்திரா. அவரை நான் முதலில் ஒளிப்பதிவாளராக அறிமுக…
[1:42 pm, 08/02/2026] Santhosh: (2/2)

இயக்குநர் சசி பேசியதாவது..,
எல்லாருக்கும் வணக்கம். இந்த படத்துல இருக்கிற பாடல் காட்சிகளையும், சீன்ஸையும் நீங்க எல்லாரும் பார்த்திருப்பீங்க. உங்கள் எல்லாருக்கும் இருக்கும் எதிர்பார்ப்பை விட இரண்டு மடங்கு அதிகமான எதிர்பார்ப்பு எனக்கு இருக்கிறது. அதுக்குக் காரணம் கணேஷ்சந்திரா. அவர் ஒரு சினிமாட்டோகிராபர் மட்டுமல்ல, ஒரு இயக்குநரும் கூட. நான் விஜய் ஆண்டனி, அஜய் வைத்து கிராமத்து பின்னணியில் ஒரு படம் செய்து வருகிறேன். அந்த படத்துல எல்லாருமே ஃபுல்லா டேன் லுக். விஜய் ஆண்டனிக்கு ஒரு விவசாயி கேரக்டர். ஆனா இங்க இந்த படத்துல பார்த்தா… எல்லாமே கலர் கலரா, ஃப்ரெஷ்ஷா இருக்கிறது. அதை பார்த்ததும் ரொம்ப பெரிய சர்ப்ரைஸாக இருந்தது. அஜய் என் படத்திலேயும், இந்த படத்திலேயும் இரண்டு வெவ்வேறு மாதிரியான கேர்கடர்களை மிக அழகாக கையாண்டிருக்கிறார். உண்மையிலேயே நல்ல திறமைசாலி. இப்படத்தில் ரொம்ப சென்சிபிளான, எமோஷனல் லவ் ஸ்டோரி இருக்கும் அப்படிங்கிற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. கணேஷ்சந்திரா பற்றி நான் கேள்விப்பட்டிருக்கேன். அவர் எடுக்குற கதை, சொல்லுற விதம் எப்போதுமே ஒரு உணர்வோட இருக்கும். அதோட விஜய் ஆண்ட்னியின் பாடல்கள்… சோகமான இடத்துல வர வேண்டிய சாங்ஸ்கூட ஒரு தனி வைபோட, அவருடைய ஸ்டைல்ல ரொம்ப அழகா போட்டிருக்கார். இந்த பிப்ரவரி 13, ஒரு நல்ல கதையோட, ஒரு நல்ல படம் திரைக்கு வரப்போறதுன்னு நம்பிக்கையோட முடிக்கிறேன். அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
நடிகர் அஷ்வின் ராம் பேசியதாவது..,
நான் தியேட்டர் குரூப்பில் ஏழு வருடமாக இருந்தேன், பூக்கி பட வாய்ப்பு தந்த என் இயக்குநர் கணேஷ் சந்திரா சார், விஜய் ஆண்டனி சாருக்கு நன்றி. இயக்குநர் ரொம்பவே கூல், அவர் ஒரே நேரத்தில் கேமரா, டைரக்ஷன் இரண்டையும் செய்துள்ளார். இந்த டீம் ரொம்பவே இனிமையாக இருந்தார்கள். எல்லோருக்கும் என் நன்றிகள். விஜய் ஆண்டனி சார் பாடல்களுக்கு தீவிர ரசிகன், அவர் தயாரிக்கும் படத்தில் நடிப்பது பெரிய மகிழ்ச்சி. படக்குழு அனைவருக்கும் என் நன்றிகள். படம் உங்கள் அனைவருக்கும் பிடிக்கும் நன்றி.

காஸ்ட்யூம் டிசைனர் மாளவிகா பேசியதாவது..,
இந்த வாய்ப்பை எனக்கு வழங்கியதற்காக முதலில் விஜய் ஆண்டனி சாருக்கு என் மனமார்ந்த நன்றி. “பூக்கி” எனக்கு ரொம்பவே சிறப்பு வாய்ந்த படம். என் மனசுக்கு ரொம்ப நெருக்கமான படம். இந்த டீம்ல வேலை பண்ணும்போது மனசு ரொம்ப சந்தோசமாக இருந்தது. முழு இயக்குநர் குழுவுக்கும் என் மனமார்ந்த நன்றி. எல்லாரும் உண்மையிலேயே அருமையாக வேலை செய்திருக்கிறார்கள். இந்தப் படம் எல்லாருக்கும், குறிப்பா காதல் ஜோடிக்கு, ரொம்ப நெருக்கமான படமாக இருக்கும். பிப்ரவரி 13, கண்டிப்பா திரையரங்குகளில் இந்த படத்தை பாருங்கள். நன்றி.
நடன இயக்குநர் ஹரி பேசியதாவது..,
இந்தப்படம் மிகச்சிறந்த அனுபவம். இயக்குநருக்கும் விஜய் ஆண்டனி சாருக்கும் என் நன்றிகள். பிப்ரவரி 13, கண்டிப்பா திரையரங்குகளில் எல்லோரும் இப்படத்தை பாருங்கள் நன்றி.
கலை இயக்குநர் பிரகதீஸ்வரன் பேசியதாவது…,
இந்த வாய்ப்பை எனக்கு வழங்கிய இயக்குநர் கணேஷ் சந்திராவுக்கும், விஜய் ஆண்டனி அவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றி. கணேஷ் இந்த படத்தை பற்றி முதலில் எனக்கு சொல்லும்போது, “இது ஃபேன்டஸியா பண்ணணும், இதுவரைக்கும் பண்ணியதிலிருந்து கொஞ்சம் வேற மாதிரி இருக்கணும், பார்த்து பண்ணுங்கன்னு சொன்னார். அப்போலிருந்தே அவர் எனக்கு ரொம்ப சப்போர்ட்டா இருந்தார். “இது இப்படிதான் வரணும், இது இதே மாதிரி தான் இருக்கணும்”ன்னு ஒவ்வொன்றையும் டிஸ்கஸ் பண்ணி, அதுக்கப்புறம் ஒவ்வொரு விஷயமாவே பிரிச்சு வேலை பண்ணினோம். அந்த உழைப்பு எல்லாம் சேர்ந்து, நல்லா வந்திருக்கு. இந்த படமும் நல்லா வந்திருக்கு. 13 ஆம் தேதி பார்த்துட்டு, நீங்க எல்லாரும் உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள் நன்றி.
பாடலாசிரியர் லாவர்தன் பேசியதாவது..,
“பூக்கி” படத்தில் எனக்கு இந்த வாய்ப்பை கொடுத்த விஜய் ஆண்டனி சாருக்கு என் மனமார்ந்த நன்றி. இந்தப் பாடலை எழுதினது எனக்கு ரொம்பவே சந்தோசம். விஜய் ஆண்டனி சார் கூட வேலை பார்க்க வேண்டும் என்பது எல்லா பாடலாசிரியர்களும் ஒரு கனவாக இருக்கும். அந்த கனவு எனக்கு நிறைவேறிச்சுன்னு நான் தைரியமா சொல்ல முடியும். ஏன்னா, நான் 12th படிக்கிற டைம்ல “வேட்டைக்காரன்” படம் ரிலீஸ் ஆனது. அப்போ சார் பாட்டை கேட்டு, “புலி உருமுது” மாதிரி பாடல்களுக்கெல்லாம் நாங்க வைப் பண்ணிய நாட்கள் அது. அப்படிப்பட்ட ஒரு மியூசிக் டைரெக்டரை ரசிச்சு வளர்ந்த நான், இன்னைக்கு அவருக்குப் பக்கத்துல உட்கார்ந்து, நான் பாடல் எழுதுற பாக்கியம் கிடைத்திருக்கிறது, நான் ரொம்பவே ஆசீர்வதிக்கப்பட்டவன் ன்னு தான் சொல்லணும். அந்த விதத்துல, விஜய் ஆண்டனி சாருக்கு நான் மனதார நன்றியை சொல்லிக்கிறேன். இந்த படத்தோட இயக்குநருக்கும், எழுத்தாளர் புதிய பரிதி சாருக்கும் என் நன்றியைத் தெரிவிச்சுக்கிறேன். இந்த வாய்ப்பை கொடுத்ததற்காக எல்லாருக்கும் என் மனமார்ந்த நன்றி.
ஸ்டண்ட் மாஸ்டர் பிரபு ஜாக்கி பேசியதாவது..,
இந்த படத்தில் எனக்கு வாய்ப்பு கொடுத்த விஜய் ஆண்டணி சாருக்கு முதலில் என் மனமார்ந்த நன்றி. கணேஷ் சந்திரா கூட நான் முன்பே மூன்று படங்களில், அவர் கேமராமேன் ஆக இருந்தபோதும், அசிஸ்டெண்ட் ஆக இருந்த போதும், ஃபைட் மாஸ்டர் டீமில் வேலை செய்திருக்கேன். அந்த நம்பிக்கையில் இந்த படத்தில் எனக்கு வாய்ப்பு கொடுத்ததுக்கு ரொம்ப நன்றி. இந்த படம் முழுக்கவே மிக நல்ல ஸ்டண்ட் காட்சிகள். குறிப்பா படத்துல ஒரு சேஸ் சீன் இருக்கிறது, அதுக்கப்புறம் ஒரு ஃபைட் சீனும் இருக்கிறது. கண்டிப்பாக நீங்க எல்லாரும் பார்த்து ரசிப்பீங்கன்னு நம்புறேன். நன்றி.

நடிகை பிரியங்கா மஸ்தானி பேசியதாவது…,
என்னுடைய ஊர் சேலம், கிராமத்து பொண்ணு, என்னை மாதிரி ஒரு கிராமத்திலிருந்து வந்த தமிழ் பொண்ணுங்களுக்கு, ஒரு பெரிய தயாரிப்பு நிறுவனத்துல வாய்ப்பு தர்றது மிகப்பெரிய விசயம். அதுக்காக விஜய் ஆண்டனி சாருக்கு பெரிய நன்றி. இயக்குநர் ரொம்ப டென்ஷன் ஆகவே மாட்டார். இது என்னுடைய முதல் படம். அதனால டைரக்டர்னா ரொம்ப கோபப்படுவாங்க, டேக் சரியா போகலன்னா திட்டுவாங்கன்னு நினைச்சு நான் ரொம்ப பதட்டமாதான் இருந்தேன். ஆனா அவர் அப்படியே இல்ல. ரொம்ப கூலாக, ஜாலியாக எல்லாத்தையும் ஹேண்டில் பண்ணினார். அதுக்காக ரொம்ப ரொம்ப நன்றி. அனைவருக்கும் நன்றி.
குழந்தை நட்சத்திரம் ஷன்விகா ஶ்ரீ பேசியதாவது..,
எல்லோருக்கும் வணக்கம் எனக்கு வயது 5 தான். இந்தப்படத்தில் நடித்தது ரொம்ப ஜாலியாக இருந்தது. இப்படம் எல்லோருக்கும் பிடிக்கும். பிப்ரவரி 13 ஆம் தேதி எல்லோரும் படம் பாருங்கள் நன்றி.

நடிகர் சத்யா பேசியதாவது..,
பிக்பாஸ் அங்கீகாரத்தை விட, இப்படத்தை பெரிய அங்கீகாரமாக நினைக்கிறேன். இயக்குநர் கணேஷ் சார், விஜய் ஆண்டனி சாருக்கு நன்றி. இப்படம் மிகச்சிறப்பான அனுபவம். அஜய் கற்பூரம் மாதிரி, எந்த காட்சியையும் அட்டகாசமாக நடிப்பார். ஹீரோயின் நன்றாக நடித்துள்ளார். பிப்ரவரி 13 ஆம் தேதி எல்லோரும் திரையரங்கில் படம் பாருங்கள் நன்றி.
விஜய் ஆண்டனி நடிப்பில் பெரு வெற்றி பெற்ற சலீம் படத்தில் அறிமுமாகி, ஜெயில், காரி, Miss Match தெலுங்குப்படம் உட்பட பல படங்களுக்கு ஒளிப்பதிவாளராக பணியாற்றிய கணேஷ் சந்திரா இப்படத்தை, ஒளிப்பதிவு செய்து இயக்கியுள்ளார்.
இன்றைய 2K தலைமுறை காதலுக்கு பெற்றோர்கள் குறுக்கே நிற்பதில்லை, காதலர்களே தான் பிரச்சனையாக இருக்கிறார்கள். அப்படியான 2K தலைமுறை காதலர்களின் உலகை மையப்படுத்தி, ஒரு இளைஞன் சந்திக்கும் பிரேக்கப் அதைத்தாண்டி அவன் எப்படி வெளியே வருகிறான் என்பதை, பரபரப்பான திரைக்கதையில், கலக்கலான காமெடியுடன் சொல்லும், ஒரு அழகான ரோம் காம் திரைப்படமாக ‘பூக்கி’ உருவாகியுள்ளது.
தன் இசை ரசிகர்கள் நீண்ட காலமாக முன்வைத்து வந்த கோரிக்கையை நிறைவேற்றும் வகையில், மிக நீண்ட இடைவேளைக்குப் பிறகு விஜய் ஆண்டனி இந்த திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

மார்கன் படத்தில் தனது நடிப்பால் பெரும் பாராட்டுக்களைக் குவித்த அஜய் திஷான் இப்படத்தில் நாயகனாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக தனுஷா நடித்துள்ளார். இவர்களுடன் லக்ஷ்மி மஞ்சு, பாண்டியராஜன், சுனில், இந்துமதி மணிகண்டன், விவேக் பிரசன்னா, பிளாக் பாண்டி, ஆதித்யா கதிர், பிக்பாஸ் சத்யா, MJ ஶ்ரீராம், அஸ்வின் ராம், ஷியாரா ஷார்மி, பிரியங்கா ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் இணைந்து நடித்துள்ளனர்.
இப்படம் காதலர் தினக் கொண்டாட்டமாக வரும் 2026 பிப்ரவரி 13 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது.
தொழில்நுட்பக் குழு விபரம்
தயாரிப்பு – Vijay Antony Film Corporation
தயாரிப்பாளர்கள் – ஃபாத்திமா விஜய் ஆண்டனி
இயக்கம், ஒளிப்பதிவு : கணேஷ் சந்திரா
எழுத்து – புதிய பரிதி
இசை, எடிட்டிங் : விஜய் ஆண்டணி
கலை இயக்கம் : பிரகதீஸ்வரன்
ஆடை வடிவமைப்பாளர் : மாளவிகா செல்வம்
நடனம் – ஹரிகிரண்
மக்கள் தொடர்பு : சதீஷ் (AIM)
