ஹிந்துஸ்தான்சேம்பர்ஆஃப்காமர்ஸ்- இன் 80 வதுஅமர்வில், 2026 – 27 ஆம்ஆண்டிற்கானதலைவராகதிரு. பிரவீன்குமார்டாட்டியாதேர்வுசெய்யப்பட்டுள்ளார்.

ஹிந்துஸ்தான் சேம்பர் ஆஃப் காமர்ஸ்– இன் 80 வது அமர்வில், 2026 – 27 ஆம் ஆண்டிற்கான தலைவராக திரு. பிரவீன் குமார் டாட்டியா தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்நிகழ்ச்சியில், சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட மாண்புமிகு தமிழ்நாடு சபாநாயகர் திரு. ஜே.சி.டி. பிரபாகர் அவர்கள், சபையின் புதிய அலுவலகத்தை காணொளி வாயிலாக திறந்து வைத்தார். டிரிவிட்ரான் ஹெல்த்கேர், நியூபெர்க் டயக்னாஸ்டிக்ஸ் குழுமங்களின் தலைவரும் நிர்வாக இயக்குநருமான டாக்டர் ஜி.எஸ்.கே. வேலு கௌரவ விருந்தினராக கலந்துகொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தார்.
சென்னை, தாஜ் கன்னிமாரா நட்சத்திர விடுதியில், இந்துஸ்தான் சேம்பர் ஆஃப் காமர்ஸ்(HCC)- இன் 80ஆவது ஆண்டு அமர்வு, சிறப்பாக நடைபெற்றது. அந்த அமர்வின், பொதுக்குழுக் கூட்டத்தில், 2026–27ஆம் ஆண்டிற்கான ஹெச்.சி.சியின் தலைவராக திரு. பிரவீன் குமார் டாட்டியா ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இந்த அமர்வில், ஹிந்துஸ்தான் சேம்பர் ஆஃப் காமர்சின், ரஹேஜா டவர்சில் அமைந்துள்ள புதிய அலுவலகத்தை, சிறப்பு விருந்தினர், தமிழ்நாடு அரசின் சட்டப்பேரவைத் தலைவர் மாண்புமிகு திரு. ஜே.சி.டி. பிரபாகர் அவர்கள், காணொளி வாயிலாகத் திறந்து வைத்தார். இது சபையின் 80ஆவது ஆண்டு விழாவிற்குக் கூடுதல் சிறப்பைச் சேர்த்தது. சபையின் செயலகத்தை வலுப்படுத்தவும், உறுப்பினர்களுக்கான சேவைகளை மேம்படுத்தவும், வர்த்தக மற்றும் தொழில் துறையினருடன் இணைந்து செயல்படுவதற்கான நவீன தளத்தை உருவாக்கவும் இந்தப் புதிய அலுவலகம் ஒரு முக்கிய முன்னேற்றமாகும்.
மிகச்சிறப்பும், வரலாற்று முக்கியத்துவமும் வாய்ந்த இந்த நிகழ்ச்சி, சபையின் முன்னாள் தலைவர் திரு. ரமேஷ் துகர் அவர்களின் முழுமையான பங்களிப்பால் சிறப்பு பெற்றது. எட்டு தசாப்தகால நிறுவன மரபுடன் சபை முன்னேறிச் செல்லும் நிலையில், இந்தத் திறப்பு விழா ஒரு புதிய அத்தியாயத்தின் தொடக்கத்தைக் குறிப்பதாக அமைந்தது.
1945ஆம் ஆண்டு நிறுவப்பட்ட ஹிந்துஸ்தான் சேம்பர் ஆஃப் காமர்ஸ் வணிகச் சமூகத்தின் நலன்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் நீண்டகால அமைப்புகளில் ஒன்றாகும். வர்த்தகம் மற்றும் தொழில்துறையின் பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்தவர்களை உறுப்பினர்களாகக் கொண்ட இச்சபை, வணிகச் சமூகத்திற்கும் அரசுக்கும் இடையிலான உறவை எளிதாக்குகிறது. வணிகங்களைப் பாதிக்கும் பொதுவான பிரச்சினைகளை எடுத்துரைத்து அரசின் கொள்கைகள் மற்றும் சட்டங்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துகிறது. அறிவுப் பகிர்வு, வலையமைப்பு மற்றும் வணிகத் தொடர்புக்கான வாய்ப்புகளையும் இச்சபை வழங்குகிறது.
2026ஆம் ஆண்டு, ஹிந்துஸ்தான் வர்த்தக சபையின் 80 ஆண்டுகால சேவை, வளர்ச்சி மற்றும் வணிகச் சமூகத்தின் மீதான அர்ப்பணிப்பைக் கொண்டாடும் ஒரு மைல்கல் ஆண்டாகும். கடந்த பல தசாப்தங்களாக, வணிகத் தலைவர்கள், தொழில்முனைவோர், தொழில்முறை நிபுணர்கள் மற்றும் கொள்கை வகுப்பாளர்கள் ஆகியோருக்கிடையே ஆக்கபூர்வமான உரையாடல் மற்றும் ஒத்துழைப்புக்காக ஒன்றிணையும் தளமாக இச்சபை விளங்கி வருகிறது.
புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள திரு. பிரவீன் குமார் டாட்டியா, வணிகம் மற்றும் அமைப்புசார் செயல்பாடுகளில் பல்லாண்டுகள் அனுபவம் கொண்ட தொழிலதிபரும் சமூக சேவகரும் ஆவார். தலைவராகத் தேர்ந்தெடுக்கப்படுவதற்கு முன்பு சபையில் பல்வேறு தலைமைப் பொறுப்புகளையும் வகித்துள்ளார்.
வணிகம், வர்த்தக அமைப்புகள் மற்றும் சமூக நிறுவனங்களுடனான அவரது தொடர்பு, வணிகச் சமூகம் எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் வாய்ப்புகள் குறித்த பரந்த அனுபவத்தை அவருக்கு அளித்துள்ளது. சுகாதாரம், கல்வி மற்றும் சமூக மேம்பாட்டுத் துறைகளில் மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளிலும் அவர் ஈடுபட்டுள்ளார்.
உறுப்பினர்களுடனான தொடர்பை வலுப்படுத்துதல், உறுப்பினர்களுக்கான தகவல் தொடர்பு மற்றும் சேவைகளை மேம்படுத்துதல், வணிக வலையமைப்பை ஊக்குவித்தல், வர்த்தகம், தொழில்துறை மற்றும் அரசுக்கு இடையே ஆக்கபூர்வமான கலந்துரையாடலை எளிதாக்குதல் ஆகியவற்றை, சபையின் தலைவராக அவர் மேற்கொள்வார்.
தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள, திரு. பிரவீன் குமார் டாட்டியா அவர்களுடன், வருங்காலத் தலைவராக, திரு. ஹிரேன் பி. ஷா, துணைத் தலைவர்களாக, டாக்டர். கீதா பிரேம்குமார், திரு. எம். கோபிநாத் ஆகியோரும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். மேலும், பொருளாளராக, திரு. நரேந்திர ஸ்ரீஸ்ரீமால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
இந்நிகழ்ச்சியின் அம்சமாக, 2025–26ஆம் ஆண்டில் சபை மேற்கொண்ட செயல்பாடுகள் மற்றும் முயற்சிகளின் மேலோட்டத்தை வழங்கும் “ஹெச்.சி.சி ஆண்டு மதிப்பாய்வு 2025–26” வெளியிடப்பட்டது. 2025–26ஆம் ஆண்டில் சபையின் செயல்பாடுகளை எடுத்துக்காட்டும் ஒலி–ஒளிக் காட்சியும் திரையிடப்பட்டது.
தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள, திரு. பிரவீன் குமார் டாட்டியா,
தமது ஏற்புரையில், சபையை முன்னெடுத்துச் செல்லவும், உறுப்பினர்கள் மற்றும் வணிகச் சமூகத்துடனான தொடர்பை வலுப்படுத்தவும் தமக்குள்ள உறுதிப்பாட்டை எடுத்துரைத்தார்.
தலைவர் பதவிக் காலத்தை நிறைவு செய்த திரு. டி. ரமேஷ் துகரின் பங்களிப்பையும் இந்நிகழ்வில் நினைவுகூரப்பட்டது. அவரது பங்களிப்பு மற்றும் தலைமைத்துவத்தைப் பாராட்டி, அவர் கௌரவிக்கப்பட்டார்.

Leave a Reply

error:

Discover more from view7media

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading