Double Occupancy – திரைப்பட விமர்சனம்
இயக்குநர் அஸ்வின் கந்தசாமி வித்தியாசமான கற்பனை கதைக்களத்துடன் “டபுள் ஆக்குபென்சி” திரைப்படத்தை உருவாக்கியுள்ளார். பகலில் பெண்ணாகவும், இரவில் ஆணாகவும் வாழும் ஒருவரின் வாழ்க்கையை மையமாகக் கொண்ட இந்தக் கதை புதிய அனுபவத்தை தருகிறது. சிக்கலானதாக தோன்றும் இந்த கருத்தை அனைவரும் புரிந்துகொள்ளும் வகையில் எளிமையாகவும் சுவாரஸ்யமாகவும் இயக்குநர் கையாண்டிருப்பது படத்தின் பலமாக அமைந்துள்ளது. கதை, 15 வருட திருமண வாழ்க்கைக்குப் பிறகு குழந்தை பெற்றுக் கொள்ளும் தம்பதிகளான போஸ் வெங்கட் மற்றும் வினோதினியுடன் தொடங்குகிறது. ஆனால் பிறந்த…
