விஜய் மில்டனின் ‘தொண்டர் படை – Chapter 1: Gods and Soldiers’ படத்தின் முதல் பாடல் ‘நந்தினி’ வெளியீடு!

A group of seven individuals stands on a stage, receiving flowers, with a colorful backdrop featuring graphics related to a film or event. They are dressed in casual clothing, some wearing matching shirts, while a woman in a sari is also present.

5000 மாணவர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்ற பாடல் வெளியீட்டு விழா – இளைஞர்களின் கொண்டாட்டத்தில் ‘நந்தினி’!

விஜய் மில்டன் இயக்கத்தில், ரஃப் நோட் புரொடக்‌ஷன் (Rough Note Production) நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியுள்ள தமிழ் – தெலுங்கு இருமொழித் திரைப்படமான ‘தொண்டர் படை – Chapter 1: Gods and Soldiers’ படத்தின் முதல் பாடலான ‘நந்தினி’ (Nandhini) பாடல், சவேதா கல்விக் குழுமத்தில் 5000 மாணவர்கள் முன்னிலையில் கோலாகலமாக வெளியிடப்பட்டது.

A group of people on stage during an event, with one person reading from a document. They are wearing matching white shirts with logos, and there's a colorful background featuring text that reads 'Chapter-I'.

இன்றைய இளைஞர்களின் மனதைக் கொள்ளை கொண்டுள்ள பிரபல ராப் இசைப் பாடகர் பால் டப்பா, இப்படத்தில் நடித்திருப்பதோடு, ‘நந்தினி’ பாடலுக்கு இசையமைத்து, பாடல் வரிகளையும் எழுதி, பாடி, நடனமாடியும் அசத்தியுள்ளார். இளைஞர்களை நேரடியாகச் சந்தித்து அவர்களின் முன்னிலையில் இந்தப் பாடலை வெளியிட வேண்டும் என்ற விருப்பத்தின் அடிப்படையில் சவேதா கல்லூரியில் நடைபெற்ற இந்நிகழ்வில், சவேதா கல்விக் குழுமத்தின் நிறுவனர் மற்றும் வேந்தர் டாக்டர் என்.எம். வீரையன் (Dr. N.M. Veeraiyan) பாடலை வெளியிட்டார். படத்தின் நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் கலந்துகொண்ட இவ்விழாவில், 5000 மாணவர்கள் முன்னிலையில் திரையிடப்பட்ட, மாணவர்கள் உற்சாகத்துடன் பாடலை வரவேற்று, ஆரவாரத்துடன் கொண்டாடினர்.

இளைய தலைமுறையினரைக் கவரும் வகையில் துள்ளலான இசையுடனும் சமகால ராப் இசையின் தனித்துவமான அம்சங்களுடனும் உருவாகியுள்ள ‘நந்தினி’ பாடலில் வேடன், பால் டப்பா, கிஷோர் மற்றும் அம்மு அபிராமி ஆகியோர் இணைந்து பாடியுள்ளனர். பாடலின் இசை, வரிகள், பாடல் வெளிப்பாடு மற்றும் நடனம் என அனைத்திலும் பால் டப்பாவின் பங்களிப்பு இடம்பெற்றிருப்பது பாடலுக்கு கூடுதல் சிறப்பைச் சேர்த்துள்ளது. மாணவர்களின் உற்சாகமான வரவேற்பு, இளைஞர்களைக் குறிவைத்து உருவாக்கப்பட்டுள்ள இந்தப் பாடலின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

விஜய் மில்டன் இயக்கியுள்ள இப்படத்தில் ராஜ் தருண், பரத், ஆரி அர்ஜுனன், சுனில், ராதா ரவி, கிஷோர், பால் டப்பா, அம்மு அபிராமி, பிரசன்னா பாலச்சந்திரன், பரத் சீனி, விஜேதா வசிஸ்ட், ஜெஃப்ரி, இம்மான் அண்ணாச்சி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படத்திற்கு சாம் சி.எஸ். இசையமைத்துள்ளார்.

பிரம்மாண்டமான களத்திலும், இளைஞர்களைக் கவரும் அம்சங்களுடனும் உருவாகி வரும் ‘தொண்டர் படை – Chapter 1: Gods and Soldiers’ திரைப்படத்தை வரும் டிசம்பர் மாத இறுதியில் வெளியிடப் படக்குழுவினர் திட்டமிட்டு வருகின்றனர். படத்தின் அடுத்தடுத்த அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

error:

Discover more from view7media

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading