கான்சிட்டி” முதல்சிங்கிள்வெளியீடு…, வைரலாகும்கொரியன்ஃபேமிலிசாங்  “ராராரங்கையா” குத்துப்பாடல்!

கான் சிட்டிமுதல் சிங்கிள் வெளியீடு…, வைரலாகும்  கொரியன் ஃபேமிலி சாங்  “ரா ரா ரங்கையாகுத்துப்பாடல்!
ரா ரா ரங்கையாரிலீஸ்ரசிகர்களை ஆட வைக்கும்கான் சிட்டிகுத்துப்பாடல்!
கொரியன் ஃபேமிலி சாங் வைப்ஸ்… “கான் சிட்டிமுதல் சிங்கிள் கலக்கல் ஹிட்!
பவர் ஹவுஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் ஹரிஷ் துரைராஜ் இயக்கத்தில், அர்ஜூன் தாஸ், அன்னா பென், யோகி பாபு, வடிவுக்கரசி உள்ளிட்டோர் நடித்திருக்கும் “கான் சிட்டி” திரைப்படம் வெளியீட்டுக்கு முன்பே பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கி வரும் நிலையில், தற்போது இப்படத்தின் முதல் சிங்கிள் பாடல் வெளியாகி ரசிகர்களைக் கவர்ந்து வருகிறது.
ஷான் ரோல்டன் இசையில், மோகன் ராஜன் எழுதியுள்ள இந்த பாடலை வங்கல் புள்ள, விக்கி, சுப்லாஷினி, லீலா ஆகியோர் உற்சாகமாக பாடியுள்ளனர். “கொரியன் ஃபேமிலி சாங்” என சுவாரஸ்யமான தலைப்புடன் வெளியாகியுள்ள இந்த பாடல், “ரா ரா ரங்கையா” என்ற வரியுடன் துவங்கி, நம்மூர் தரைலோக்கல் குத்துப்பாணியில் முழுக்க முழுக்க உற்சாகத்தைக் கொட்டுகிறது.
பாடலின் இசை மட்டுமல்லாமல், காட்சியமைப்பும் ரசிகர்களை ஈர்க்கும் வகையில் அமைந்துள்ளது. குறிப்பாக படத்தின் முக்கிய கதாபாத்திரங்கள் அனைவரும் சேர்ந்து ஆடும் குத்தாட்டம், பாடலுக்கு மேலும் உயிரூட்டுகிறது. திரையில் ஒவ்வொரு கதாபாத்திரமும் தனித்தன்மையுடன் தெரியும் வகையில் அமைந்துள்ள இந்தப் பாடல் ரசிகர்கள்  எதிர்பார்க்காத பல ஆச்சரியங்களை அள்ளித் தெளித்து, வெளியான வேகத்தில் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
புதுமையான கதைக்களத்தில் உருவாகும் “கான் சிட்டி” படம், நகர வாழ்க்கையில் கடனில் சிக்கித் தவிக்கும் ஒரு மிடில் கிளாஸ் குடும்பத்தின் கதையை மையமாகக் கொண்டு சுவாரஸ்யமாக நகர்கிறது. குடும்ப உணர்வுகள், நகைச்சுவை, பரபரப்பு ஆகிய அனைத்தும் கலந்த ஒரு ஃபேமிலி எண்டர்டெயினராக இப்படம் உருவாகியுள்ளது.
இந்தப் படத்தில் அர்ஜூன் தாஸ் நாயகனாக நடிக்க, அன்னா பென் கதாநாயகியாக நடித்துள்ளார். இவர்களுடன் யோகி பாபு, வடிவுக்கரசி,  குழந்தை நட்சத்திரம்  அகிலன் உள்ளிட்டோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். (மேலும் விரிவான கதாப்பாத்திர பட்டியல் இணைப்பில் வழங்கப்பட்டுள்ளது.)
பவர் ஹவுஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் ஹரிஷ் துரைராஜ் இயக்கியுள்ள இந்த படம், மங்களூர், சென்னை, மும்பை உள்ளிட்ட பல நகரங்களில் படமாக்கப்பட்டுள்ளது. மேலும், இப்படத்தின் டிஜிட்டல் உரிமையை Netflix நிறுவனம் பெரும் தொகைக்குக் கைப்பற்றியிருப்பதும் குறிப்பிடத்தக்கது.
இப்படத்தின் ஒவ்வொரு அப்டேட்டும் பெரும் சுவாரஸ்யங்களை தந்து வரும் நிலையில்,  முதல் சிங்கிள் மூலம் ரசிகர்களின் கவனத்தை மீண்டும் ஈர்த்துள்ள “கான் சிட்டி”, விரைவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
Link :  https://youtu.be/e-uMIm-Yxhk?si=JUqDyHJgLi691ftE

Leave a Reply

error:

Discover more from view7media

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading