“Makkal Selvan” Vijay Sethupathi Launches “Thendralil” A Soulful New Indie by Charulatha Mani from Loopd by Divo, Warner Music South

A woman wearing a floral dress and a man in a light blue shirt hold a large poster featuring the title 'கென்மல்' with a colorful illustration of a conch shell and a figure inside, against a textured gray background.

இசை புயல் AR Rahman இசை அமைத்து உருவான ‘தக் லைஃப்’ திரைப்படத்தில் இடம்பெற்று, மாபெரும் வரவேற்பைப் பெற்ற “அஞ்சு வண்ணப் பூவே” என்ற வெற்றிப் பாடலை தொடர்ந்து, இந்தியாவின் புகழ்பெற்ற பின்னணிப் பாடகி Dr சாருலதா மணி தனது புதிய சுயாதீன (Independent) பாடலான “தென்றலில்” மூலம் மீண்டும் ரசிகர்களைக் கவரவுள்ளார். இந்த பாடல் Divo Warner South வெளியீடு.

திறமை வாய்ந்த கலைஞர்களை தொடர்ந்து ஊக்குவித்து வரும் பன்முகத் திறமை கொண்ட sensational star “மக்கள் செல்வன்” விஜய் சேதுபதி இப்பாடலை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளார்.  

இசையமைப்பாளர், பாடலாசிரியர் மற்றும் பாடகி என மூன்று பரிமாணங்களில் சாருலதா மணி முத்திரை பதித்திருக்கும் ஒரு சிறப்பு வாய்ந்த மைல்கல் படைப்பாக “தென்றலில்” உருவாகியுள்ளது. தனது தனித்துவமான குரல் வளத்தாலும், பாரம்பரிய மற்றும் நவீன இசை வடிவங்களை அழகாக இணைக்கும் திறமையாலும் அறியப்படும் அவரது இந்தப் புதிய படைப்பு, இசைப் பிரியர்களுக்கு ஒரு புத்துணர்ச்சியூட்டும் மெல்லிசை அனுபவமாக அமைந்துள்ளது.

சாருலதாவின் குரலில் பல ஹிட் பாடல்கள் மக்கள் மனதில் முதல் இடம் பெற்றவை. என் உச்சி மண்டைல (வேட்டைக்காரன் ), Chillax (வேலாயுதம் ), தீயே தீயே (மாற்றான் ), கண்ணுக்குள் பொத்திவெப்பேன் (திருமணம் இன்னும் நிக்காஹ் ), sada nannu (keerthy suresh Mahanati), அஞ்சு வண்ண பூவே (AR Rahman, Thug Life) போன்ற superhit film songs பாடியவர் சாருலதா. இவர் ஆஸ்திரேலியா Griffith University-யில் இசையில் PhD & Postdoctoral Fellowship முடித்துள்ளார். இசை அமைப்பாளராக இவரின் புதிய அவதாரம் வரவேற்கத்தக்கது.
இந்த பாடல் அனைத்து digital streaming platforms-ல் வெளிஇட பட்டுள்ளது. ஒரு அருமையான music video YouTube – ல் release ஆகி உள்ளது. VIDEO LINK:
புது முகங்கள் மாளவிகா & தவன் நடித்து தரேன் கார்த்திக் இயக்கி உள்ளார்.

வெளியீட்டு விவரங்கள்:

பாடல்: தென்றலில்
இசையமைப்பு, பாடலாசிரியர் & பாடகி: Dr சாருலதா மணி
வெளியீட்டுத் தேதி: ஏப்ரல் 30, 2026
Label: டிவோ (Divo) / வார்னர் மியூசிக் சவுத் (Warner Music South)
செய்தித் தொடர்பு: நிகில் முருகன்

Leave a Reply

error:

Discover more from view7media

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading