டைட்டானிக் – திரைப்பட விமர்சனம்
சென்னையிலிருந்து பெங்களூருக்குச் செல்லும் ரயில் பயணத்தில் எதிர்பாராத விதமாக மூன்று பேர் சந்தித்துக் கொள்கிறார்கள். பூமிநாதன் (காளி வெங்கட்), சூர்யா (கலையரசன்), சந்துரு (ராகவ் விஜய்) ஆகிய மூவருக்கும் இடையே ஏற்படும் அறிமுகம், நாளடைவில் சுவாரஸ்யமான உரையாடலாக மாறுகிறது. காதல், ரொமான்ஸ், திருமணம் எனத் தொடங்கும் இவர்களது பேச்சில், ஒவ்வொருவரும் தங்களுடைய கடந்த கால காதல் அனுபவங்களையும், திருமண வாழ்க்கை குறித்த எண்ணங்களையும் சுவாரஸ்யமாகப் பகிர்ந்து கொள்கிறார்கள். சூர்யா தனது கல்லூரி கால காதலான அம்மு (கயல்…
