நடிகர் கே. மணிகண்டன் நடிக்கும் ‘மக்கள் காவலன்’ படத்தின் இரண்டாவது பாடல் வெளியீடு!
தமிழ்த் திரையிசையுலகில் தனித்துவமான இசையமைப்பாளராகத் திகழும் நிவாஸ் கே. பிரசன்னா இசையமைத்துப் பாடியுள்ள மனதைத் தொடும் ‘இற இறகாக..’ எனத் தொடங்கும் காதல் பாடலை பிர்லா ஸ்டுடியோஸ் மற்றும் நீலம் ஸ்டுடியோஸ் நிறுவனங்கள் வெளியிட்டுள்ளன. ‘மக்கள் காவலன்’ படத்தில் இடம்பெற்ற ‘இக்னோர்’ (IGNORE) எனும் முதல் பாடல் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்று வரும் நிலையில், நடிகர் கே. மணிகண்டன் நடிப்பில் உருவாகி வரும் அதிரடித் திரைப்படமான ‘மக்கள் காவலன்’ படத்திலிருந்து ‘இற இறகாக..’ எனும் இரண்டாவது…
