கூடைப்பந்து விளையாட்டு களத்தை அடிப்படையாகக் கொண்ட ‘நடு சென்டர்’ சீரிஸ் நவம்பர் 20 ஆம் தேதியில் இருந்து பிரத்யேகமாக ஜியோ ஹாட்ஸ்டாரில் ப்ரீமியர் ஆகிறது!

Group portrait of a diverse cast posing together on a basketball court, featuring both male and female individuals, with a basketball in the foreground and the text 'Nadu Center' displayed prominently.

எனர்ஜி, எமோஷன் என இந்தத் தலைமுறையினருக்கு ஏற்ற பள்ளிக்கால கூடைப்பந்து விளையாட்டை அடிப்படையாகக் கொண்ட ‘நடு சென்டர்’ வெப்சீரிஸ் நவம்பர் 20 ஆம் தேதியில் இருந்து ஜியோஹாட்ஸ்டாரில் பிரத்யேகமாக ஸ்ட்ரீம் ஆகிறது. தற்போது வெளியாகி இருக்கும் டிரைய்லரில் வாழ்வில் கிடைக்கும் இரண்டாவது வாய்ப்பு, நட்பு மற்றும் விளையாட்டால் ஏற்படும் மாற்றம் என இந்தத் தொடரின் உலகிற்குள் நம்மை அழைத்து செல்கிறது.

தேசிய அளவிலான கூடைப்பந்து வீரரான 17 வயது பிகே, தவறான நடத்தைக்காக உயர்நிலைப் பள்ளியில் இருந்து வெளியேற்றப்படுகிறான். வன்முறை மற்றும் ஒழுக்கமின்மையால் பாதிக்கப்பட்ட ஒரு மோசமான பள்ளிக்கு பிகே மாற்றப்பட்டு அங்கு பொருந்த போராடுகிறான். அப்போது அவனுக்குள் இருக்கும் திறமையைக் கண்டறிந்து வைஸ் பிரின்சிபிள் ஊக்குவிக்க அவனது வாழ்வு மாறத் தொடங்குகிறது.

கட்டுக்கடங்காத மாணவர்களை கொண்ட பள்ளியில் கூடைப்பந்து அணியை உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ள பிகே-வின் தலைமைத்துவம், தன்னைத் தானே கண்டறிதல், மற்றவர்களின் நம்பிக்கை பெறுதல் மற்றும் பள்ளியின் இழந்த பெருமையை மீட்டெடுப்பது என வாழ்வில் முன்னேறுகிறான்.

எனர்ஜி மற்றும் உணர்வுப்பூர்வமான பல தருணங்களைக் கொண்ட இளைஞர்களுக்கான கதையான ‘நடு சென்டர்’ தொடரில் சூர்யா எஸ் கே, சூர்யா விஜய் சேதுபதி, சாரா பிளாக், டெரன்ஸ், முகேஷ், டோம், யஷ்வந்த், சஹானா, மதுவசந்த், ஆர்த்தி, கிஷோர், ஜீவா, நந்தகோபால், தாரா அமலா ஜோசப் மற்றும் சிவம் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இவர்களுடன் அனுபவம் வாய்ந்த நடிகர்களான ஆஷா ஷரத், கலையரசன் மற்றும் எம். சசிகுமார் ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் ஆழமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.

இந்தத் தொடர் குறித்து இயக்குநர் நரு நாராயணன் பகிர்ந்து கொண்டதாவது, “ஸ்போர்ட்ஸ் டிராமாவான ‘நடு சென்டர்’ உயர்நிலைப்பள்ளியின் கூடைப்பந்து அணி சுற்றி மட்டுமே நகரும் கதை கிடையாது. அதையும் தாண்டி அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் வாழ்க்கை முறையையும் பேசுகிறது. நான் என் உயர்நிலைப்பள்ளியில் வழக்கமாக பேஸ்கட்பால் விளையாடுவேன். பின்பு, பேஸ்கட்பால் கோர்ட்டோ கோச்சோ இல்லாத ஒரு பள்ளியில் சேர்ந்தேன். அங்கு நண்பர்களை உருவாக்கி, அணியாக சேர்ந்து பல மேட்ச் சென்றிருக்கிறோம். நல்ல நட்பு எனக்கு அங்கு கிடைத்தது. அப்படியான பிணைப்பையும் ஒற்றுமையையும் இந்தக் கதையில் பேசியிருக்கிறோம்.

இந்தத் தொடரில் பயிற்சியாளராக சசிகுமார் நடித்திருக்கிறார். வாழ்வில் எதாவது ஒரு வடிவத்தில் ஒரு நாள் நிச்சயம் பேஸ்கட்பால் உனக்கு உதவும் என பிகே-விடம் சசிகுமார் சொல்வார். இதை எனக்கு என்னுடைய பயிற்சியாளர் சொன்னார். பல வருடங்கள் முன்னால் அவர் சொன்னது எனக்கும் எஸ் கே சூர்யாவுக்கும் இன்று நனவாகி இருக்கிறது. கூடைப்பந்தால் தான் எங்கள் இருவருக்கும் முதல் வாய்ப்பு கிடைத்தது. இந்தத் தொடரை ஆத்மார்த்தமாகவும் மகிழ்ச்சியுடனும் உருவாக்கியுள்ளோம்” என்றார்.

நடிகர்களின் திறமையான நடிப்பு, இளைஞர்களின் எனர்ஜி, விறுவிறுப்பான கதை சொல்லல் என அனைத்து தரப்பினருக்கும் பிடித்த தொடராக ‘நடு சென்டர்’ இருக்கும். இத்துடன் விளையாட்டின் பவர், நோக்கம், ஒழுக்கம், தனக்கென அடையாளம் தேடும் தலைமுறையினரின் வாழ்க்கை என அனைத்தும் இதில் இடம்பெறும்.

நவம்பர் 20, 2025-ல் இருந்து ஜியோஹாட்ஸ்டாரில் பிரத்யேகமாக ஸ்ட்ரீம் ஆகிறது ‘நடு சென்டர்’.

தொழில்நுட்பக் குழு விவரம்:

இயக்கம்: நரு நாராயணன்,
எழுத்து: நரு நாராயணன், கீர்த்தி, நிர்மல்,
ஒளிப்பதிவு: ஹெஸ்டின்,
இசை: விஷால் சந்திரசேகர்,
படத்தொகுப்பு: வெங்கட்,
கலை இயக்குநர்: ஜாக்கி,
தயாரிப்பு: அரபி ஆத்ரேயா, அவினாஷ் ஹரிஹரன் மற்றும் செந்தில் வீராசாமி,
தயாரிப்பு பேனர்: அக்குவா புல்ஸ் கண்டெண்ட்

ஜியோஹாட்ஸ்டார் பற்றி:

ஜியோஹாட்ஸ்டார் இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளங்களில் ஒன்று. இது ஜியோசினிமா மற்றும் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் ஆகியவற்றின் இணைப்பின் மூலம் உருவாக்கப்பட்டது. சிறப்பான கதைக்களங்கள், புதுமையான தொழில்நுட்பத்துடன் ஜியோஹாட்ஸ்டார் இந்தியா முழுவதும் உள்ள அனைவருக்கும் பொழுதுபோக்கை மறுவரையறை செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

Leave a Reply

error:

Discover more from view7media

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading