வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் சார்பில் டாக்டர் ஐசரி கே. கணேஷ் தயாரிப்பில், பிரேம் குமார் இயக்கத்தில் ஃபஹத் ஃபாசில் நடிக்கும் படத்திற்கு ‘அசரீரி’ எனப் பெயரிடப்பட்டுள்ளது!

Six people pose at a film event, with two men holding a movie clapperboard in front of a red promotional backdrop.

96’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு தனி இடத்தைப் பிடித்த இயக்குநர் பிரேம் குமார், தொடர்ந்து ‘மெய்யழகன்’ திரைப்படத்தின் மூலம் தனது தனித்துவமான கதை சொல்லும் பாணியால் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர். இவரது இயக்கத்தில், மலையாளத் திரையுலகின் முன்னணி நடிகரான ஃபஹத் ஃபாசில் நடிக்கும் புதிய திரைப்படத்திற்கு ‘அசரீரி’ எனப் பெயரிடப்பட்டுள்ளது.

Three people pose at an event in front of a pink promotional backdrop.

வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் சார்பில் டாக்டர் ஐசரி கே. கணேஷ் தயாரிக்கும் இப்படம் ஒரு திரில்லர் திரைப்படமாக உருவாகி வருகிறது. வித்தியாசமான கதாபாத்திரத் தேர்வுகள் மற்றும் இயல்பான நடிப்பால் இந்திய அளவில் கவனம் பெற்றுவரும் ஃபஹத் ஃபாசில், இப்படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார். இப்படத்தின் தலைப்பு மற்றும் வெளியீட்டுத் தேதியைப் படக்குழு தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இப்படத்தில் ஃபஹத் ஃபாசிலுக்கு ஜோடியாக ஷிவதா நடிக்கிறார். மேலும், சேத்தன், ஹரிஷ் உத்தமன், கருணாகரன், சரண் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

இப்படத்திற்கு மகேந்திரன் ஜெயராஜு ஒளிப்பதிவு செய்கிறார். கோவிந்த் வசந்தா இசையமைக்கிறார். கோவிந்தராஜ் படத்தொகுப்புப் பணிகளை மேற்கொள்கிறார். மகேஷ் மேத்யூ சண்டைக் காட்சிகளை வடிவமைக்க குமார் கங்கப்பன் கலை இயக்கத்தை கவனிக்கிறார்.

திரில்லர் திரைப்படமாக உருவாகி வரும் ‘அசரீரி’ திரைப்படம் 2027 ஜனவரி 1ஆம் தேதி புத்தாண்டு வெளியீடாக திரையரங்குகளில் வெளியாகிறது. படத்தின் மற்ற நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் குறித்த கூடுதல் தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

error: